பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ரக்பி ஆட்டம்

ஆண்டுகள் நான்கு உருண்டோடின. வீழ்ந்த பனி, காய்ந்த வெயில், பெய்த மழை ஆகிய யாவும் நிலமகள் போர்வையை அகற்றி அகற்றிப் புதுப்பித்து வந்தன. உலகம் மாறிவந்தது. ஆனால் உலகத்தின் மாறுதல் ரக்பியின் மாறுதலுக்கு ஈடன்று. ரக்பியை விட்டு ஓர் ஆண்டு வெளியே சென்றவர் மறு ஆண்டு வந்து ரக்பியைக் கண்டால் அஃது ஒரு புது ரக்பியாகவே காட்சியளிக்கும்! அதே சமயம் பள்ளியின் உள்ளே இருப்பவர்களுக்குப் பள்ளியின் மாறுதல் மிகுதி தோற்றாது. தம் மாறுதல் அதாவது வளர்ச்சி தான் தோற்றம். உயிரினங்கள் வளரும்போது தம் வளர்ச்சியை அறியாதது போலவே ரக்பியும் தன் வளர்ச்சியைத் தான் உணராது வளர்ந்தது. அறிஞர் ஆர்னால்டு அவ்வளர்ச்சியை மறைந்து நின்றியக்கும் வள்ளற் கலைவலாளரா யமைந்தார்.

நான்காவது ஆண்டு முடிந்துவிட்டது. பள்ளி விடுமுறை விட்டு பெரும்பாலான சிறுவர் அவரவர் தாயகம் நாடி நாலா திசைகளுக்கும் சென்றுவிட்டனர். அறிஞர் ஆர்னால்டு ஏரிமாவட்டத்திற்கு உலாச் சென்றுள்ளார். ஆயினும் பள்ளியிலும் மனையிலும் இன்னும் ஆள்நடமாட்டம் குறையவில்லை. காரணம் பள்ளித் தொடர்புள்ள இருபெரு நிகழ்ச்சிகள் இன்னும் நடக்க இருக்கின்றன. அவற்றுள் ஒன்று முன்பு ரக்பி வெல்ஸ்பான் (wellesbourne) ஆட்டக் குழுவினுடன் நடத்திய ஆட்டத்துக்கு அவர்கள் வந்து ஆடும் எதிர் ஆட்டம். மற்றொன்று மேரில்போன் (marylebone) ஆண்டு மரப்பந்துப் பந்தய ஆட்டம்.

இரு நிகழ்ச்சிகளும் ரக்பியிலேயே நடப்பதனால் நகர மக்கள் எழுச்சியும் ரக்பியைச் சுற்றியும் ஊடாடியும் உலவுகின்றனர். அயலூரர் கூடவந்து வேடிக்கை பார்க்க