||– –
312 ||-
அப்பாத்துரையம் – 8
முதலாவது இருப்பவர் நெட்டையாய்ச் சற்று வளைந்த உடலுடையவர். அவர் சமய போதகருக்குரிய எளிய உடை உடுத்திருக்கிறார். அவர் அடர்ந்த புருவத்தின் தோற்றம் அவர் புன் முறுவலின் கவர்ச்சியைக் கெடுக்கிறது. சோர்வு முகத்தில் உள்ள வரைகளை வலியுறுத்திக் காட்டுகிறது. இவரே பள்ளியில்லத்தின் தலைவர். அறிஞர் இல்லத்தில் முன்பு டாமையும் ஈஸ்டையும் சந்திக்கும் போது இருந்ததை விட நான்காண்டுகளில் அவர் மிகவும் மாறியுள்ளார். ஆண்டு இறுதியில் ஆறு வாரங்களாக நடைபெற்ற பள்ளித் தேர்வு வேலையின் சோர்வு இன்னும் அவரை விட்டு நீங்கவில்லை.
L
அவரருகிலிருந்து சரிசமமாகப் பேசிக்கொண்டிருக்கும் ளைஞனே டாம். அவன் இப்போது மூத்த புரூக்கையும் இளைய புரூக்கையும் பின்பற்றி ஆட்டத் தலைவனாயிருக்கிறான். அதற்குரிய தனிப்பட்ட அரைக்கச்சையும் உடையும் அவனுக்குச் சிறப்பளிக்கின்றன. அவன் அணிந்திருக்கும் ரக்பி பதினொருவர் காலணிகள் அக்குழுவினருள் அவன் ஒருவன் என்பதையும், அதன் தலைவன் என்ற முறையிலேயே ஆட்டத்தில் அவன் தன் முறைக்காகக் காத்திருக்கிறான் என்பதையும் காட்டுகின்றன. அவனுக்கு இப்போது வயது பத்தொன்பது. ஆனால் அவன் தன்னிலும் மூத்த பல மாணவரும் ஆசிரியரும் தோளளவாகத் தெரியும் படி ஆறடி உயரமாக வளர்ந்திருக்கிறான். செம்பு நிறமாகப் பழுத்த முகமும் சுருண்ட மயிரும் அடர்ந்த மீசையும் அவன் ஆட்டக்களத்தேர்வுக்கும் வாழ்க்கையார்வத்துக்கும் ஆண்மைக்கும் சான்றளிக்கின்றன. ஈஸ்டைத் தொங்கிக்கொண்டு பள்ளியில் நுழைந்த சிறுவன், ஈஸ்டோ அல்லது அவன் தோழர்கள் எவருமோ அடையாத உயர்வும் மதிப்பும் அடைந்து, அறிஞர் ஆர்னால்டின் தனி மதிப்புக்குரிய ஒரு சிலருள் முதல்வனாயிருக்கிறான்.
இருவர் காலடியிலும் சார்ந்து குந்தியிருப்பவனும் டாமுக்கு அடுத்தபடி வாட்டசாட்டமான இளைஞனே. அவனும் மரப்பந்தாட்டத்துக்குரிய உடையணிந்து, பந்து மட்டையைக் கால்களுக்கிடையே குறுக்காகத் தொங்கப் போட்டுக்கொண்டு வீறுடன் உட்கார்ந்திருக்கிறான். அவன் வேறு யாருமல்லன் ஆர்தரே, டாமைவிட அவன் தோற்றம் வியக்கத்தக்க முறையில்