டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
315
இருந்து ஆடும்படி செய்வதே தலைவருக்கு இப்போது கடுமையாயிருந்தது.
ஆயினும், எப்பாடுபட்டாலும் அமைதி காத்து ஒருமுக முயற்சி ஏற்படுத்தியாக வேண்டும். அஃதில்லாமல் வெற்றிக்கு வழிகாண முடியாது. அவர்தம் முழு முயற்சியையும் தீரத்தையும் அமைதி ஒழுங்கு காப்பதிலேயே ஈடுபடுத்துகிறார்.
மேரில்போன் மூன்றாம் ஆட்டக்காரனின் மட்டைப் பந்தை ஏற்று ஏற்றுக் களத்தின் எல்லா மூலைகளையும் நோக்கி அடிப்பதால், ரக்பி வீரர் ஒருவருக்காவது குனிய நிமிர நேரமில்லை. ஒருவருக்கும் அவன் பிடிவிடவும் இல்லை. கெலிப்பு எண் ஐம்பதுக்கு ஏறுகிறது. பள்ளி வீரர் விழிக்கின்றனர். கூடியிருக்கும் மக்கள் மலைப்புடன் திறந்த கண் மூடாமல் பார்க்கின்றனர்.
ஜான்சனும் இன்று அமைதியிழந்துதான் ஆடுகிறான். பந்தை அவன் களங்கடந்து வாரியடிக்கிறான். ஆனால், எதிர்த் தரப்பிலும் பலர் அமைதியிழந்து வெளியே செல்லும் பந்தைக் கூட எடுத்துவிட நேர்கிறது. ஒருதடவை பந்து மட்டையின் ஓரத்தில் தாக்கப்பட்டுச் சுழன்று சுழன்று சுழல் துப்பாக்கியின் குண்டுபோல் பாய்ந்து வருகிறது. நிலத்திலிருந்து மூன்று அடிக்கு மேற்படாமல் அது மிதந்து செல்வதாகத் தெரிகிறது. ஜான்சன் அதைத் தாக்குகிறான். அவனுக்கே அதைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில்லை. ஆனால், யாவரும் வியப்படையும் படி, அவனுக்கே புரியாமல் பந்து அவன் மட்டையைச் சுற்றிக் கைவிரல்களுடன் ஒட்டினாற்போலப் பின்னுகிறது!
அன்று ஜான்சன் ஆடிய ஆட்டம்போல ஆண்டுக்கணக்காக அந்தக் களத்தில் யாரும் ஆடியதில்லை, “நன்று; நன்று! மிக நன்று வாழ்க ஜான்சன்! வளர்க மரப்பந்தின் மாட்சி!" என்ற வாழ்த்தொலிகள் எங்கும் எழுந்தன.
இதுமுதல் விளையாட்டில் விருவிருப்பு மிகுதியாயிற்று. பள்ளித் தலைவர் ஆட்டக்காரன் ஒருவனைத் தடுத்து நிறுத்தினார். எதிர்த் தரப்பின் சிறந்த ஆட்டக்காரனான ஏலாபி (Aislabie)யிடமிருந்து மெள்ள மெள்ளப் பல ஆட்டங்களைக் கைப்பற்றினார். பன்னிரண்டரை மணிக்குள் இப்படியும்