அப்பாத்துரையம் – 8
(316) ||- மேரில்போனின் கெலிப்பு தொண்ணூற்றெட்டு ஆட்டங்கள் வரை சென்றுவிட்டது. தன் குழுவினருக்கு ஊக்கமளிப்பதற்காகக் குழுவின் தலைவர் களத்தில் வந்தார். அவர் மிக அழகிய முறையில் இருபத்தைந்து ஆட்டங்கள் கெலித்தார். இப்போது முதல் வட்டணை(innings)யில் ரக்பிக்கு நான்கு ஆட்டங்கள்தாம் கட்டையாயிருக்கின்றன.
பள்ளியில்
அவர்கள் விருந்து நாலாம் படிவப் நடைபெற்றது. விருந்தின் தரமும் பண்பும் மிக உயர்ந்ததாக இருந்தது. ஆட்டக்களத்தின் ஆரவாரத்தைவிட அது ஆரவார மிக்கதாகவும் இருந்தது. ஆட்டக்காரன் ஒருவன் மிகச் சிறந்த களியாட்டப் பாடல்களைப் பாடி எல்லாரையும் மகிழ்வித்தான். ஏலாபியின் பேச்சுக்களைப் போல் இதுவரை யாரும் இதற்குமுன் பேசியிருக்கமாட்டார்கள். அவன் அந்த அளவில் எல்லாரையும் கிண்டல் செய்து பேசினான்.
திரும்ப ஆட்டம் தொடங்கிற்று. பள்ளி மீண்டும் ஐந்து கோட்டை இறக்கிக் கெலிப்புக்கு முப்பத்திரண்டு ஆட்டமே குறைய எடுத்தது. இதற்குக் காரணம் இரண்டாவது வட்டணையில் மேரில்போன் ஆட்டக்காரர் மிகவும் அசட்டை மனப்பான்மையுடன் ஆடியதே. ஆனால் இறுதிக்கட்டம் வருமுன் அவர்கள் முழுமூச்சுடன் ஆடத் தொங்கி விட்டனர்.
ஜான்சனின் சிறந்த ஆட்டமும் அதனைப் பள்ளி மாணவரும் மக்களும் வரவேற்று ஆரவாரிக்கும் ஆரவாரமும், டாம், ஆர்தர், இல்லத் தலைவர் ஆகிய மூவர் கவனத்தையும் விரைவில் ஈர்த்தன. "ஆகா, ஆகா! ஜான்சனின் ஆட்டமே ஆட்டம்! இதற்கு ஈடு எங்கும் இராது!” என்று கைகொட் டி ஆர்பரித்தான் ஆர்தர்.
“என்ன நடந்தது! நான் ஒன்றும் கவனிக்கவில்லையே!” தலைவர்.
66
காலை முறிக்க இருந்த பந்து கைமணிக்கட்டையைச் சுளுக்கேறச் செய்துவிட்டது. ஆயினும் கை சுளுக்கியிரா விட்டால் அது கால்முட்டைப் பேர்த்திருக்கும். அது முட்டுக்கு நேராகவே வந்தது. ஜான்சனைத் தவிர வேறுயாரால் முடியும்,