டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
(317
இதைத் தடுக்க, ஜான்சன் ஆட்டமே ஆட்டம்! என்று கிளர்ச்சியுடன் கூறுனான் டாம்.
"பந்தெறிபவர்களும் எளிதில் விடுவதாகத் தெரியவில்லை. எப்படியும் தோல்வியை ஏற்கக்கூடாதென்று அவர்கள் உறுதி செய்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது!" என்றான் ஆர்தர்.
தலைவர்: அதுதான் எனக்குச் சற்றும் புரியவில்லை.நயமிக்க நாகரிக அமைதியுடைய ஆட்டமே எனக்குப் பிடிக்கிறது. மரப்பந்தாட்டப் பண்பு என்று நீங்கள் கூறுவது இன்னதுதான் என்று எனக்குப் புரியவில்லை. ஆயினும் உங்களில் ஒருவரோ ஜாக்கோ வீசி அடிக்கும்போது நான் மகிழத்தான் செய்கிறேன்.
டாம் : ஆம், ஆனால் அது நட்பின் பாசம். மரப்பந்தின் பாசம் அன்று. எனக்குக் கிரீக் என்றால் எப்படியோ அப்படித்தான் இருக்கிறது. உங்களுக்கு மரப்பந்து என்றால்! கெட்டியான என் மண்டையில் அது நுழைவதில்லை, நயமான உங்கள் மண்டையில் இது புகுவதில்லை!
தலைவர்: எனக்கென்னவோ நீங்கள் மரப்பந்தில் காட்டுகிற ஆர்வத்தில் பத்திலொரு பங்கு கிரேக்க மொழியைத்தன் வசப்படுத்துவதில் காட்டினால் எவ்வளவோ நல்லது என்று தோற்றுகிறது. மொழியடிப்படை பெறாததால் அரிஸ்டோஃபானிஸ் போன்ற களிநாடகக் கவிஞரின் நகைத்திறத்தையே நீங்கள் எவ்வளவு இழக்க நேருகிறது!
டாம் : ஐய, ஒவ்வொருவர் செயல் வெற்றியும் அவரவர் தனிச் சுவையையும் தனித் திறத்தையும் பொறுத்தது. மரப்பந்தாட்டத்தில் காட்டிய ஆர்வத்தையும் முயற்சியையும் நான் கிரேக்க இலக்கணத்தில் காட்டியிருக்கக்கூட, இதில் அடைந்த முழுநிறை வெற்றியை அதில் அடைந்திருப்பேன் என்று கூற முடியாது.அவரவர் ஆர்வம் அவரவர் திறத்தின் வழியேதான் செல்லும். அதை ஒருதுறைப் படுத்தினாலடையும் சிறப்பைத் பாத்தீடு செய்வதால் பெறமுடியாது என்றே நினைக்கிறேன்.
தலைவர் : உங்கள் கொள்கையில் நீங்கள் பிடி முரண்டாயிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் வாதத்தை என்னால் ஒரு நல்ல சான்று காட்டி மறுத்துவிட முடியும். ஆர்தர்