||– –
(318) ||-
அப்பாத்துரையம் - 8
கிரீக்கிலும் மரப்பந்தாட்டத்திலும் ஒருங்கே சிறப்படைய வில்லையா?
டாம் : ஆ, அவர் இருதிறச் சிறப்புக்கு அவர் முயற்சி காரணமன்று. கிரீக் அவருக்கு இயல்பாகவே வருவது. எனக்கு டான் குவிக்ஸோட் போன்ற நாட்டுக் கதைகள் எப்படியோ, அப்படி அவருக்கு ஹெரோடோட்ஸ் போன்ற கிரேக்க வரலாற்று இலக்கிய நூல்கள்! கிரீக்கில் அவர் ஒருநாளும் தடம் பிறழமாட்டார். ஆனால் மரப்பந்திலோ என்றால், அவர் திறமை என் முழுநிறை முயற்சியின் பயன். இன்னும் என்னிடம் உள்ள பற்றுதல் காரணமாக அவர் அதனை இனியதொரு கடமையாகவும், என் அறிவுரை காரணமாக ஓர் உடற்பயிற்சி முறையாகவும், பண்பாகவுமே ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இறுதிவாசகம் எந்த அளவு உண்மையோ என்று தலைவர் ஐயுறாமலிருக்க முடியவில்லை. அதற்கேற்ப அவர்களிருவரையும் விட ஆர்தரே ஆட்டத்தில் கவனம் செலுத்துவதாகத் தெரிந்தது.
"அதோ பாருங்கள், டாம்! பெய்லி நம் பக்கத்தைக் காட்டிக் கொடுத்து விட்டான். என்ன படுமோசம்” என்றான் அவன்.
டாம் : அதற்கென்ன செய்வது? அவன் நன்றாகத்தான் ஆடினான். அவன் விளையாட்டில் குறைவு எதுவும் கிடையாது. சரி. அவன் இடத்துக்கு அடுத்தப்படி யார்? யாரை எடுப்பது?
ஆர்தர் : எனக்கு நினைவில்லை. நினைவில்லை. பட்டி நம் பாசறையிலிருக்கிறது.
டாம் : அப்படியானால் அங்கேபோய் எடுத்துப் பார்ப்போம், வாருங்கள்.
அவர்கள் புறப்படுவதற்குள் ஜாக்கி ராகிள்ஸும் இரண்டு ஆட்டக்காரரும் தீவின் கழிதாண்டி மேட்டில் ஏறினார்.
ஜக் : ஆ, பிரௌண்! அடுத்த ஆட்டத்தை எனக்குத் தரப்படாதா?
டாம்: பட்டியில் அடுத்த பெயர் யாருடையது?
ஜாக் : வின்டர் பெயரும் அடுத்தபடி ஆர்தர் பெயரும் இருக்கின்றன. ஆனால் எதிரி இன்னும் இருபத்தாறு