பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

13

கண்டறிந்துள்ளனர். அவர் எதிர்ப்பு, பகைமை எதிர்ப்பல்ல என்பதை அவர் குறும்புச் சிரிப்பு ஓயாது நினைவூட்ட வல்லது.

ஷா உலகப் புகழ்பெற்றவர். ஆனால், அவரது புகழிலும் ஒரு தனித் தன்மை உண்டு. பிரிட்டனைவிட அமெரிக்காவிலும், அமெரிக்காவைவிட ஐரோப்பாவிலும், அவர் உயர்வாகப் போற்றப்பட்டவர். பெர்லினிலும் நியூயார்க்கிலுமே அவர் நாடகங்கள் முதன்முதல் பெரு வெற்றி பெற்று, அவர் புகழ் பரப்பின. வருங்காலத்தில் கீழ்நாடுகளில் அவர் பண்புகள் உணரப்படுந்தோறும், அவர் புகழ் அத்திசையில் இன்னும் பரவி உயர்வுபெறும் என்பது உறுதி. அவர் உலகப் பண்பு உலகளாவுந் தோறுமே உயர்வுறுவது என்பதற்கு இதுவும் ஒரு சான்று ஆகும்.

பிரிட்டன் முதன் முதலில் ஷாவின் பண்புகளை எதிர்ப்புப் பண்புகளாக மட்டுமே காணமுடிந்தது. அப் பண்பு பொதுமக்கள் அறிவை உயர்த்திப் பொது அறிவாக்கிய பின்னரே, அவர்கள் அதனை உண்மை உருவில்கண்டு மதிக்கமுடிந்தது. எல்லா நாடுகளிலும் சிறப்பாக, பிரிட்டனிலும், அந் நாட்டின் குழுநல வாளர்களே மக்கள் பொது நல வாழ்வில் ஆக்கலாற்றலையும் அழித்தலாற்றலையும் இயக்கலாற்றலையும் உடையவராயிருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஷா என்றுமே புரியமுடியா ஒரு பெரும் புதிராயிருந்துவந்துள்ளார். அவர் கூறுவதில் உண்மை உண்டு என்பதை அவர்கள் உணர்வர்; ஆனால் அவர் குற்றச் சாட்டுகளை அவர்களால் அப்படியே ஏற்கமுடிவதில்லை. அவர் எதிர்ப்புத் தன்மை தம்மை நேரடியாகவோ, தனிப்பட்ட முறை யிலோ தாக்கவில்லை என்பதை அவர்கள் காண்பர்; ஆன அது தம்மை யறியாமல் தம்மையும், பொது மக்கள் கவனியாமல் பொதுமக்களையும் மாற்றிவருகிறது என்பதையும் அவர்கள் உணர்ந்துவந்தனர். இக் காரணங்களாலேயே, அவர்கள் பல நாளாக. அவரை மதித்தும் மதியாதவராய் இருந்தனர். முதலில் அவர்கள் அவரை ஒரு வெறியர் என்றும், பித்தரென்றும் கூறினர். பின் ஓர் அறிவுலகக் கோமாளி என்று தட்டிக்கழிக்கப் பார்த்தனர். இதனை ஷா உள்ளூற உணர்ந்துகொண்டதனால், அவர் அறிவுலகக் கோமாளியாகவே முழுதும் நடிக்கத் தொடங் கினார். அவர் அருள்நிலைப் பண்பை அறியாமல், அவரை எ எதிரியாகக் கொள்பவர்களின் அச்சத்தை நீக்குவதே இந் நடிப்பின் நோக்கம்

னால்