பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(320)

||-

அப்பாத்துரையம் – 8

தாம் ஐந்தாட்டம் (fruits). முயல் - நாய் ஆகியவற்றைவிட உதைபந்தும் மரப்பந்தும் சீரிய ஆட்டங்களாகின்றன. முந்திய வகையில் ஆடுபவர் ஒவ்வொருவரும் தத்தம் வெற்றிக்காகவே ஆடுகின்றனர். அவை தந்நலத்தை வளர்க்கின்றன. ஆனால் உதை பந்தில் ஓரளவிலும் மரப்பந்தாட்டத்தில் சிறப்பாகவும் ஒவ்வோர் ஆட்டக்காரனும் தன் வெற்றிக்காகப் பாடுபடவில்லை. தன் குழு வெற்றிக்காகப் பாடுபடுகிறான். இப்பண்பு படிப்படியாக வளர்ந்து, குழுவை நிலையத்துக்காகவும் நிலையத்தை நாட்டுக்காகவும் நாட்டை மனித சமூகத்துக்காகவும் பாடுபடத் தூண்டுகிறது,பயிற்றுவிக்கிறது.

தலைவர் : ஆம் உங்கள் விளக்கம் மிகமிகச் சிறந்ததே. இதைக் கேட்கும்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. பள்ளித் தலைவர் பதவி எவ்வளவு பொறுப்புடையதோ, அதே அளவு அல்லது அதைவிடப் பொறுப்புடையதாக மரப்பந்தின் பதினொருவர் குழுவின் தலைவர் பதவியை அறிஞர் ஆர்னால்டு கருதுவதாகத் தெரிகிறது. அத்தகைய பொறுப்புக்கு உங்களைத் தகுதியுடையவர் என்றுதான் அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

டாம்: அப்படியா? ஆனால் இன்று அந்தத் தகுதியில் நான் குறைந்துவிட்டேன் என்று தான் நினைக்கிறேன். இல்லை யென்றால் இந்த நெருக்கடிக் கட்டத்தில் ஜாக் ராகிள்ஸை அனுப்ப இணங்கியிருக்கப்படாது.

பேச்சு அறிஞர் ஆர்னால்டைப் பற்றியதாகத் திரும்பிற்று. "பதினொருவர் தலைவரைப்போல் எத்தனை பொறுப்புடைய பதவிகள் இப்பள்ளியல் இருக்கின்றன. அத்தனைக்கும் தக்க ஆட்களை மாணவர்களிடமிருந்து பொறுக்கி எடுத்தல்; அதற்காக மாணவர் தகுதி திறமை பண்புகளை ஆராய்ந்துணர்தல்; தகுதி திறமைப் பண்புகளில் தக்க ஆளில்லாத விடத்தில் அதை உருவாக்கித் தலைவர்களைப் படைத்து உண்டு பண்ணுதல்-இவ்வளவையும் செய்யும் தகுதியுடைய பள்ளித் தலைவர் பொறுப்பு எவ்வளவு சீரியது! அதை அறிஞர் ஆர்னால்டைப் போல் இவ்வளவு திறம்பட நடத்துபவர் யார்? நான் அறிந்தவரை பிரிட்டிஷ் பேரரசாட்சியிலேயே வேறு எந்தச் சிறு பகுதியும் ரக்பியளவு