பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

||– –

அப்பாத்துரையம் – 8

தலைவர் : மிக நன்று; அந்தச் தற்செயல் நிகழ்ச்சி உண்மையில் ‘தற்செயல் நிகழ்ச்சி’ அன்று. அறிஞர் ஆர்னால்டு வேண்டுமென்று திட்டமிட்டே ஈஸ்டர் விழாவை ஒத்திப் போட்டார்! இப்போது அறிஞரின் மூளைத் திறனும் பண்பும் புரிகிறதா?

டாம் : ஆ, அப்படியா? இந்த எண்ணம் எனக்கு என்றும் உண்டானதில்லை.

தலைவர் : அது எவருக்கும் உண்டாயிருக்க முடியாதுதான். அவர் என்னுடன் கலந்தாராய்வதனால்தான் நான் இதனை அறிகிறேன். அறிஞர் சீர்திருத்தங்களிற் பலவற்றுக்கும் அவர் கண்

டிப்புக்கும் தொடர்பே கிடையாது. கண்டிப்புப் புற ஒழுங்குக்குதான். அக ஒழுங்கைப் பேணுவதற்கு அவர் அன்பு முறையையே நம்பியிருக்கிறார். அகப்பண்பைச் சீர்திருத்தம் செய்வதற்குச் சந்தடியில்லாது, எவரும் அறியாதபடி படிப்படியாகச்செய்யும் மாறுபாட்டையே அவர் நம்பியிருக்கிறார். இவற்றை அவர் யாருக்கும் தெரிவிப்பதுமில்லை. என்னிடம் ஓரளவு தெரிவித்ததற்குக் காரணம் நான் அவருக்கு அடுத்தபடி வகிக்க இருக்கும் பொறுப்பும், அவர் முறைகளின் மரபு பேண என்னைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற அவசியமும்தான்.

ஜான் ராகிள்ஸ் நல்ல பந்தடிதான். ஆனால் ஆட்டத்தின் நயவயங்களறியாதவன். கெலிப்புக்கு நாலு கோட்டையுடன் இருபத்து நான்கு ஆட்டம் குறைவான நிலையிலிருந்து, அதே கோட்டையுடன் பதினேழு ஆட்டம் ஆடும்வரை அவன் ஆட்டத்தில் மிக விரைந்து முன்னேறினான். பள்ளி மாணவர், மக்கள் காது செவிடுபடும்வரை அவன் ஆட்டத்தைப் புகழ்ந்து ஆரவாரம் செய்தனர். ஆனால் ஆட்டத்தின் போக்குத் தமக்கு மாறாவதை அறிந்த மேல்போர்ன் தலைவர் தம்முட் கலந்து ஆராய்ந்து போர் முறையில் ஒரு மாற்றம் செய்தனர். பந்தை அவர்கள் சுழல்விசை கொடுத்து அடித்தனர். ஜாக்கின் மட்டை பட்டதும் அது வானளாவ உயர்ந்தது. சுழல்விசைக்கு எதிர்விசை தர அவனுக்குப் பயிற்சி போதாது. ஆட்டம் சட்டெனத் திசை மாறிற்று.

"எனக்குத் தெரியும், இது இப்படித் திரும்புமென்று. ஆட்டம் நெருக்கடிக் கட்டம் அடைந்துவிட்டது. போவோம்,