டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
323
களத்துக்கு," என்று டாம் தலைவரை அழைத்துக்கொண்டு சென்றான்.
டாம் பள்ளிக் குழுவின் முனைவருடன் கலந்தாய்ந்து, அமைதியாக ஆடவேண்டும் என்ற கட்டளையுடன் ஆர்தரை அனுப்பினான். ஆர்தரை விட வின்டர் நல்ல பந்தடி என்று பலர் கருதினர். நல்ல பந்தடியைவிட அமைந்த பந்தடியே இப்போது நல்லது என்றான் டாம்.
களமுழுவதும் இப்போது ஒரே மின்னதிர்ச்சியடைந் திருந்தது. முதலில் ஓர் ஆட்டம் கெலித்தான். அதன்பின் ஜான்சன் பந்தை மேற்கொண்டு ஆர்தரின் பக்கத்துணையுடன் இரண்டு மூன்று ஆட்டங்கள் கெலித்தான். இப்போது இன்னும் பதினொரு ஆட்டங்கள் தாம் வேண்டியிருந்தன. இரு பக்கங்களிலும் ஊசி விழுந்த அரவம் கேட்குமளவு அமைதி நிலவிற்று. இப்போது ஆர்தர் பந்தை மேற்கொண்டு இரண்டு ஆட்டம் கெலித்தான். “நல்ல ஆட்டம், ஆர்தர், நல்ல ஆட்டம்?” என்று டாம் மெச்சினான். ஆர்தர் தனக்கு மூன்று பரிசு ஒருங்கே கிடைத்த போதுகூட, அவ்வளவு மகிழ்ந்ததில்லை. டாமின் பாராட்டு அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி அளித்தது!
ஆனாலும் அடுத்த பந்து ஆர்தரின் இளந்திறனுக்கு அப்பாற்பட்டதாயிற்று.ஒன்பது ஆட்டம் இரண்டுகோட்டைகள் இன்னும் இருக்கும் நிலையில் டாம் மீண்டும் தன் துணைவர்களுடன் கலந்தாராய்கிறான். வின்டரை அனுப்புவது என்று துணியப்படுகிறது. ஆனால், ஆட்டம் தொடருமுன் மேரில்போன் ஆட்டக்காரர் தொடர் ஊர்தியில் ஏறும் நேரம் வந்துவிடுகிறது.ஆகவே ஆட்டம் ஒத்திப்போடப்பட்டது.
ஆட்ட மரபைப் பின் பற்றி மிகுதி ஆட்டம் எடுத்த பக்கம் வெற்றிபெற்றதென்று அறிவிக்கப்பட்டது.
L
பள்ளி இதில் வெற்றி பெற்றாலும், அதில் பெருமைப்பட வில்லை. தோற்றவர்கள் பக்கமே உண்மை வெற்றி என்று டாமும் பதினொருவரும் எண்ணுகின்றனர். தொடர் ஊர்தியில் செல்லும் மேரில்போன் வீரர்களை, வெற்றி வீரர்களை வழியனுப்புவது போல் அவர்கள் சென்று வழியனுப்பினர்.