பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் – 8

326 || அதில் நின்று ஆக்ஸ்ஃபோர்டின் புகழ் பெருக்கியபின், நீங்களாகவே உலகில் உங்கள் பாதையை வகுக்கத்தக்கவர்கள் ஆவீர்கள்.

டாமுக்குத் தான் தன் பாதையைத் தானே வகுக்க முடியவில்லை ஆனால், தன் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தலைவர் சொல்லை எதிர்க்கவும் விரும்பவில்லை. ஆகவே கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “ஆ, மணி ஒன்பதரை ஆகிவிட்டது இன்னும் ஆர்தர் ஏன் வரவில்லை,” என்றான்.

"பதினொருவருடன் இப்போது அவர் தேநீர் அருந்திக் கொண்டிருப்பார்” என்றார் தலைவர், சிரித்துக்கொண்டே! டாம் : நீங்கள் அவரையும் அழைத்தீர்களே!

தலைவர்: ஆம் ஆனால், தம் தோழர் அழைப்பு அவருக்கு இன்னும் கண்டிப்பானதன்றோ?

டாம் : மெய்தான். உங்கள் அன்புக்கு நான் மகிழ்ச்சி தெரிவிக்க வேண்டும். அத்துடன் இந்தப் பள்ளியில் என் வாழ்க்கை இவ்வளவு இனிமையாகக் கழிந்ததற்கு ஆர்தர் தோழமை கிடைத்ததுதான் காரணம் என்று நினைக்கிறேன். அது என்னுடைய தலைசிறந்த நற்போது.

தலைவர் மீண்டும் சிரித்தார். “நற்பேறு என்று உலகத்தில் எதுவுமே கிடையாது. அது தற்செயலாக வந்த நற்பேறன்று. அறிஞர் ஆர்னால்டு உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய புரட்சிகரமான மாறுபாடு!"

டாம் மிரளமிரள விழித்தான். இதுபற்றி அவன் சிந்தித்ததே இல்லை.

“நீங்களும் ஈஸ்டும் அடிக்கடி கட்டுப்பாடு மீறினது பற்றி அறிஞர் ஆர்னால்டு உங்களிருவரையும் தண்டித்ததும், கண்டித்ததும் உங்களுக்கு நினைவிலிருக்கிறதா?" என்று கேட்டார் தலைவர்.

டாம் : ஆம். கடைசிக் கண்டிப்பு ஆர்தர் வருவதற்கு முந்திய அரையாண்டிறுதியில் நடந்தது.