பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

327

தலைவர் : ஆம். நீங்கள் போனபின் நான் அறிஞர் ஆர்னால்டுடன் பேசிக் கொண்டிருந்தேன். உங்களைப் பற்றி அவர் கேட்டார். நான் உங்கள் ஒரே குறை கட்டுப்பாட்டை மீறுவது, துடி துடிப்பு என்று கூறினேன். அத்துடன் ஈஸ்ட் உங்கள் துணையில்லாமல் அத்தகைய செயல்களில் முன்னேற முடியாது என்பதையும், மற்றப் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் உங்கள் இருவரையும் பின்பற்றுபவர்களே என்பதையும் எடுத்துரைத்தேன். அப்போது அவர் முத்திறத்தாரையும் திருத்துவதற்கு எடுத்துக் கொண்ட நடவடிக்கைதான் ஆர்தர் உங்கள் பொறுப்பில் விடப்பட்ட ஏற்பாடு.

டாம் பிரௌனுக்கு இப்போது தன் பள்ளி வாழ்க்கையின் போக்கு முழுவதும் வெட்ட வெளிச்சமாயிற்று. அத்துடன் அறிஞர் ஆர்னால்டின் ஆர்னால்டின் உண்மையான உண்மையான பெருமையையும், ஆற்றலையும், உயர் பண்பாட்டையும் அவன் இப்போதுதான் முழு அளவில் அறிந்தான்.

பள்ளியின் ஒரு துறை முன்னேற்றத்திற்காவது தான்தான் காரணம் என்ற அவன் செருக்கு வீழ்ந்தது!

“அறிஞர் ஆர்னால்டு ஒரு சிறு தெய்வம்; ரக்பி என்ற சிறு ஒளி உலகின் தெய்வம். தான் அவ்வொளி யுலகில் அவர் ஒளிக் கதிர்களின் செயல்களால் ஒளி பெற்ற ஒரு தூசி மட்டுமே” என்று தெரிந்ததும் அவன் கண்கள் வியப்பு, பெருமிதம், அன்பு ஆகியவற்றால் கனிவுற்றன.

டாம் தொடக்கத்தில் அறிஞர் ஆர்னால்டைக் கண்டு அஞ்சினான். அவர் கண்டிப்புப் பற்றிக் கேள்விப்பட்டு நடுங்கினான்.

அவர் கடவுட் பற்றும் அமைதியும் அவரைத் தொலைவி லிருந்து ஒளிகாலும் ஒரு கதிரவானாக்கிற்று.

அவர் அன்புகலந்த கண்டிப்பு அவனுக்கு அவ்வப்போது கலக்கம் தந்தது.

அவர் அன்பாதரவு அவனைப் பெருமையடையச் செய்தது. தற்பெருமை கொள்ளச் செய்தது.