பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

333

இல்ல அலுவலகத்தில் தலைவர் முழுவதும் கறுப்புடையணிந்திருந்தார். முறைப்படி வணக்கம் தெரிவித்த பின் அவர்கள் உட்கார்ந்தனர். ஆனால் இருவரும் வாய்திறக்க முடியவில்லை. தன் உள்ளத்தில் உள்ள கருத்தே அவர் உள்ளத்திலும் நிறைந்திருந்தது என்பதை டாம் உணர்ந்து கொண்டான்.

"நீங்களும் செய்தி அறிந்துதான் வந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது,” என்றார் அவர்.

“ஆம். ஆ, இனி ஓர் அறிஞர் ஆர்னால்டை எங்கே காணப் போகிறேன்!” என்று அவன் அங்கலாய்த்தான்.

"உன் உள்ளத்தில் காணலாம்!" என் உள்ளத்தில், எல்லார் உள்ளத்திலும் காணலாம்! அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்!" என்றார் தலைவர்-அமைதியுடன், ஆனால் சோகத்தின் கனிவு கலந்த குரலில்!

அறிஞரின் அறிவுபற்றித் தலைவர் பலபடியாகப் பேசினார். அவர் அன்புள்ளம் பற்றி டாம் கனிந்துருகினான். பேச்சில் இருவரின் நிரம்பிப் பளுவேறிய உள்ளங்கள் சிறிது ஆறுதல் பெற்றன.

66

'எங்கே, அடக்கம் செய்த இடம்?" என்று டாம் கேட்டான். "கோவிலகத்தில் பலிபீடத்தின் கீழ்பால்," என்றார்

தலைவர்.

இருவரும் காவலனைத்தேடிச் சென்றனர்.அவனிடமிருந்து தலைவர் திறவுகோலை வாங்கித் தந்து, "நானும் உடன்வர வேண்டுமா?” என்றார்.

தனியே தன் அறிஞருடன் பேசத்தான் விரும்பினான்.

அவன்

ஆனால் போகும் வழியிலேயே எல்லாப் பொருள்களும் அவன் தனிமையைக் குலைத்தன. 'அவை இருந்தன. அவர் இல்லை!' அவனால் தாங்க முடியவில்லை. கோவிலகத்துக்கு வெளியிலுள்ள முற்றத்துப் புல் தளத்திலேயே அவன் விழுந்து புரண்டு அழுதான். அவன் அப்போது, தான் 'கல்லூரி மாணவன், இளைஞர் தலைவன்’ என்பதை மறந்தான். 'ரக்பியின்