பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

1335

ஆர்னால்டை வரவேற்கமாட்டா. அவர் சீரிய இடத்திற்கு அடுத்தபடியாக அமர்த்தப்பட்டு வருபவரையே வரவேற்கும். ரக்பியின் பெருமைக்கேற்ற தலைவர்கள் எத்தனையோ பேர் தலைவராக வருவர். ஆனால் ரக்பிக்குப் பெருமை தரும் தலைவர், ஓர் அறிஞர் ஆர்னால்டு, இனி என்று வருவார்?

ஆர்னால்டு அறிவு அவர் புகழாயிற்று. அவர் அன்பு அவர் மாணவர் பெருமித வாழ்வாயிற்று. அவர் உயிர்த் துடிப்பு ரக்பி பள்ளியின் நாள்முறை வாழ்வாயிற்று. இன்னும் என்ன மிச்சம்? இத்தனையையும் இயக்கிய அவர் சடலம் அது அவர் உள்ளம் கோயில் கொண்ட இறைவன் கோயிலகத்தில் உள்ளது. "செல்வோம். அதைச் சென்று கண்டு நன்றி கூறுவோம். அவர் உயர்புகழ் வாழ்விற்குரிய உயிர் அமைதிபெறுக என இறைவனை வணங்குவோம்,” என்ற துணிவுடன் திறவுக் கொ காத்துடன் கோவிலகம் திறந்து அவன் உள்ளே சென்றான்.

சிறைப்புறங்கள் வழியாக அவன் உலவினான். இடை வழிகளில் அவன் காலடியிட்டு அளந்து மெல்ல நடந்தான். நடுக்கூடத்தை அடைந்தான். இறைவன் உயிர்ச்சின்னமாக, இறையருளுக்குக் கண்கண்ட சான்றாக அவர் நின்றிருந்த இடமும், அமரும் இருக்கையையும், அவர் திருமுகத்தில் இன்னருள் பொலியச் சாய்ந்து நின்ற சார்மேடையும் அதோ வீறுடன் நிற்கின்றன. சின்னம் இன்று இல்லை. சின்னத்தின் று இடத்தில் இறைவனே வந்து நிற்கின்றாரோ என்று அவன் உள்ளம் நினைத்தது. அவன் மயிர்க்கால்கள் நிமிர்ந்து நின்று சிலிர்த்தன. ஆர்னால்டின் திருக்கரத்தின் வழியாக இறைவனருள் அவன் தலைமீது வந்து தடவுவதாக அவனுக்குத் தோன்றிற்று!

“எந்தையே!” எந்தைக்கும் எல்லாருக்கும் ஒரு தனிப் பெருந்தந்தையே! ஆர்னால்டு பணிந்த உம் திருவடியை நான் பணியத்தகுமோ? ஆயினும் சிறுமைமிக்கவர் வணக்கமே உம் உள்ளத்தில் வலிமைமிக்கது என்று கேள்விப்படுகிறேன்.

அப்படியானால் சிறியேனாகிய என் வணக்கத்தையும்

அவ்வருளாளன் வணக்கத்துடன் சேர்த்து வலிமைப்படச் செய்யும்! அவர் உயிர் அமைதி பெறுக. அவர் புகழ் நீடு வளர்க. உலகம் என்றென்றும் அவர் தூய அவாக்களின் நிறைவேற்றத்திலிருந்து பின்னிடையற்க!”