பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(336) ||-

அப்பாத்துரையம் – 8

வழிபாட்டின் அமைதி அவனுக்குச் சற்று வலுத்தந்தது. அவன் வருத்தத்தை, அவன் ஆற்றாமையை அது கூடப் போக்கவில்லை.

அறிஞர் குரலைக்கேட்க அமைந்து பரவி நிற்கும் மாணவரைப் போலவே அவர் இருக்கையைக் கூர்ந்து கவனித்தவண்ணம் மாணவர் இருக்கைகள் காணப்பட்டன. கடைசியில் ஆறாம் படிவ மாணவனாகத் தான் அமர்ந்திருந்த இருக்கையை டாம் அணுகினான். அறிஞர் சென்றபின் அவர்

ருக்கை அவரை நினைவூட்டியது போலவே, தான் பள்ளிவிட்டுச் சென்ற பின் அது தன்னை நினைவூட்டக் கூடுமா என்று அவன் வியப்படைந்தான். அந்த இருக்கையிலமர்ந்து, தான் இன்னும் மாணவனாயிருப்பதாக எண்ணிப் பார்க்க விரும்பினான். அவன் உள்ளத்தில் மாணவனாக இருந்த கால நிகழ்ச்சிகள், எண்ணங்கள் அலைபாய்ந்தன.

எட்டாண்டு நிகழ்ச்சிகள் எட்டுக் கணப்போதுகளில் றிக்கொண்டு அவன் உள்ளத்திரையில் நடன ஊர்வலம் சென்றன. ஆனால் அந்த ஊர்வலம் அவனுக்கு அறிஞர் மறைவை நினைவூட்டும் இழவு ஊர்வலமாகவே தோற்றிற்று. அவர் இல்லாக் குறைவை எதுவும் நிறைவுபடுத்தவில்லை.

எத்தனையோ மாணவர்கள் அறிஞர் புகழைத் தாங்கிச் சென்றிருக்கிறார்கள். அன்பைத் தாங்கி வரும் எத்தனையோ பேர். ஆனால், டாம் தன் வருத்தமிகுதியால் தானே அவர் காரணமான துயர முழுவதையும் தாங்குவதாக எண்ணினான்.

பலகணிகளை வண்ணக் கண்ணாடிகளின் மூலமாக மாலைக் கதிரவனின் வண்ணக்கரங்கள் அறை முழுவதும் சென்று தடவின. அவற்றிடையே கதிரவனின் ஒளியின் பல் று வண்ண நிழல் ஒரு தேவ தூதன்போல வந்து டாமின் துன்புற்ற உள்ளத்தை அணைத்துக்கொண்டது. சாய்கின்ற கதிரவன் மாய்ந்தானில்லை. ஒளிவேய்ந்து இன்னும் இருளில் பட்ட உலகப் பகுதிகளுக்கு ஒளிதரச் செல்கிறான். ஆனால், இந்த இருள் நீங்கா இருளன்று. அது மீண்டும் அவன் பாலொளிக் கதிர்களையும் ஏற்கத் தன்னைச் சித்தம் செய்து கொண்டிருக்கும். இந்த எண்ணம் டாம் பிரௌணுக்கு ஆறுதல் தந்தது. ஆம், அறிஞர் புகழும் அவர் மாணவர் புகழாகிய உலகின் பல பகுதிகளிலும் ஒளி வீச