பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(338) ||-

||--

அப்பாத்துரையம் - 8

அடுத்த இருக்கையில் முன்பு இருந்த அவன் தோழன் பெயர் அவன் இருந்த இருக்கையின் அருகில் செதுக்கப் பட்டிருந்தது. செதுக்காத இருக்கைகளும் யாருடையன என்று அவனுக்குத் தெரியும். அவர்களும் அவனுடன் சேர்ந்து அறிஞர் திருவுருவுக்குத் தம் ஆவி வணக்கம் செய்வதாக அவனுக்குத் தோற்றிற்று.செதுக்காத பெயர்களை அவன் உள்ளம் சித்தரித்துக் காட்டிற்று. அவன் வந்ததுபோல யாரேனும் அங்கே வந்து, அவன் உள்ளம் அவர்களைச் சித்தரித்ததுபோல எவர் உள்ளமாவது சித்தரித்துக் காட்டாவிட்டாலும்கூட, அவர்கள் பண்பு ரக்பி உலகின் மரபுருவில் என்றும் நின்று நிலவியே இருக்கும்.

எண்ணங்களின்

'பொருள்கள் நிழல்களானால், எண்ணங்கள் மாயாப் பண்புகளின் நிழல்களேயாகும். மனிதன் வாழ்வது என்பது இம்மாயாப் பண்புகளைக் கண்டு அவற்றுக்கு உயிர் வடிவம் தருவதே என்னலாம். இன்றைய தோழர், உறவினர், உயிர்களை நாம் காண்கிறோம். இன்றுகூட நேரிடையாகக் காண்பன சில. காணாதன பல. இவற்றையும் முன்பிருந்த மிகச் சில உயிர்களையும் பற்றி எண்ணுகிறோம்; அல்லது கேட்கிறோம்; அல்லது நினையாமலே இருந்தாலும் அவற்றின் பண்புகள் உயிருலகில் தொடர்ந்து தம் மரபு வளர்க்கவே செய்கின்றன. அறிஞரை நினைப்பவரும் நினையாதவரும் அவர் பண்பின் மரபில் திளைக்காமலிரார். ஆகவே அவருக்காக வருந்துவது வீண்; வருந்தி ஏங்குவது தவறு; அவர் மரபு வளர்த்தலே மாண்பு என்று டாம் தேறினான்.

தாயின் வயிற்றில் பிறப்பதை மனிதன் தான் காண்பதில்லை, கேள்விப்படுகிறான். தாயன்பில் அவன் மீட்டும் பிறக்கிறான். தந்தை அன்பில், தோழர் கூட்டுறவில், ஆசிரியர் அறிவுப் பயிற்சியில், உயர் பண்பாளர் உரிமை ஆக்கத்தில் அவன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான். முதற் பிறப்பைவிட அடுத்த ஒவ்வொரு பிறப்பிலும் அவன் தன்னையும் தன் பிறப்பையும் மிகுதியாக அறிகிறான். டாமின் வாழ்விலும் இத்தகைய பல புதுப் பிறப்புகள் ஏற்பட்டன.எல்லாப் பிறப்புக்களிலும் முக்கிய முழுநிறை அறிவுப் பிறப்பிடமாக அறிஞர் கல்லறை அவனுக்கு அன்று விளங்கிற்று.

L