பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழி யறிந்த நன்மொழிப் புலவ !

கன்னித் தமிழொடு கவின்மலை யாளமும் பன்னரும் புகழ்சேர் கன்னட மொழியும் ஆங்கில மொழியொடு ஆந்திர மொழியும் தேங்காது கற்றுப் பாங்காய் ஆய்ந்தும் கடலொளி யன்ன நடமிடு மிந்தியை விடாது கற்று விசாரத்து பெற்றே எந்தாய் இல்லை யிந்தப் பாரில் என்றே நவின்று அதனோ டன்றி கன்னல் மொழியால் கவினாய்ப் பூட்டிய பன்மொழி யறிந்த நன்மொழிப் புலவ

- புலவர் இர. திருஞானசம்பந்தன்

தமிழ்மண் பதிப்பகம்

2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர். சென்னை 600 017.

தொலைபேசி : 044-24339030

செல்பேசி

9444410654