அறிவுலக மேதை பெர்னாட்சா
17
ஷா பிறந்துவளர்ந்த அயலார்ந்து இன்றைய தன்னாட்சி யுரிமைபெற்ற தனி அரசு அயர்லாந்து அன்று; அது 1924-க்கு முற்பட்ட, பிரிட்டானிய ஒன்றுபட்ட அரசின் உறுப்பான அயர்லாந்தே என்பது நினைவில் வைக்கத்தக்கது.
அயர்லாந்து விடுதலைபெற்றுத் தன்னாட்சி நாடான பின்பும், அயர்லாந்துடன் சேராமல் இங்கிலாந்துடனேயே சேர்ந்து,ஒன்றுபட்ட பிரிட்டன் அரசிலேயே இன்னும் உறுப்பாய் இருந்துவரும் அயர்லாந்துப் பகுதி ஒன்று உண்டு. இதுவே வட அயர்லாந்து என்று குறிக்கப்படும் அல்ஸ்டர் மாவட்டம். இன்று, விடுதலைபெற்ற அயர்லாந்துடன் அஃது ஒன்றுபடாமல், அயல் நாடாகிய பிரிட்டனுடன் ஒன்றுபட்டிருக்கிறதன்றோ? இது போலவே, அயர்லாந்து பல நூற்றாண்டுகளாக நடத்திவந்த விடுதலைப் போராட்டத்திலும், அஃது அயர்லாந்துடன் சேராமல் வேறுபட்டே நின்றது. இதுமட்டுமோ? அயர்லாந்து மக்களின் பொருளியல் வாழ்வு, மொழி வாழ்வு, பண்பாட்டியக்கங்கள் ஆகிய எல்லாவற்றிலுமே இஃது அயர்லாந்துடன் மாறுபட்டே இயங் கியது. அது பெயரளவில் வட அயர்லாந்து என்று கூறப்பட்டதே தவிர வேறில்லை. உண்மையில் அஃது அயர்லாந்தின் ஒரு பகுதியாக நிலவவில்லை. அயர்லாந்திலுள்ள ஓர் இங்கிலாந்தாக, இங்கிலாந்தின் கடல்கடந்த ஒரு மறுபதிப்பாகவே அது நிலவிற்று.
ய
நாட்டு மக்களின் ஒரு பகுதியாகவும் இயங்காமல், அயல் நாட்டவராகவும் இயங்க நாடாத இம்மாயப் பிறப்பினத்தின் மரபறியாமல், ஷாவின் அயர்லாந்து மரபுச் சூழலை முற்றிலும் நாம் அறிந்துகொள்ள முடியாது இவ்வட அயர்லாந்துமக்கள் உண்மையில் இங்கிலாந்திலிருந்து சென்று அயர்லாந்தில் குடியேறிய ஆங்கிலப்பெருமக்களின்' மரபில் வந்தவர்களே. அவர்கள் அயர்லாந்தில் சிறுபான்மையினரேயாயினும், அந் நாட்டில் ஆட்சியுரிமை பெற்ற உயர் குடியினராய் இயங்கினர். அவர்கள் ஆங்கில ஆட்சியாளரின் செல்வப் பிள்ளைகளாய், அவ்வாட்சியின் கைக்கருவிகளாய் அமைந்தனர். அந்நாட்டின் அரசியலாட்சி, மொழியாட்சி, பொருளாட்சி, பண்பாட்டாட்சி ஆகிய யாவும் அவர்கள் கையிலேயே இருந்தன. அயர்ப் பொது மக்கள் வறியோராகவும், கல்வியற்றவர்களாகவும், உருளைக் கிழங்கு முதலிய கீழ்த்தர விலங்குணவு உண்பவர்களாகவும்
ன்