பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

அப்பாத்துரையம் - 8

இருந்தனர். மேலையுலகெங்கணும் அவர்கள் ஒரு கூலியினமாய் அலைக்கழிக்கப்பட்டனர். அயர்லாந்துக்காரர் என்ற சொல் பஞ்சை ஏழைகளுக்கான மறுபெயராய் இருந்தது. ஐரோப்பிய இனங்களுக்குள்ளே தாழ்த்தப்பட்ட இனமாக வாழ்ந்தனர் அவர் கள். அவர்களிடையே வட அயர்லாந்துக்காரர் அயர்லாந்தின் ஆங்கிலேயராக, அந்நாட்டின் ஆங்கிலோ ஐரிஷ்காரராக இயங்கினர்.

மொழி, பண்பாடு, பொருளியல் வாழ்வு ஆகிய துறைகளில் இருந்த இவ்வேற்றுமைகளுடனே, 16-ம் நூற்றாண்டில் புதிதாக மற்றொரு வேற்றுமையும் வந்து புகுந்தது. இந்நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுந்த சமயச் சீர்திருத்த இயக்கம் கிரித்தவ உலகை இருபெரும் படைவீடுகளாகப் பிரித்தது. வட ஐரோப் பாவின் பெரும் பகுதியும் இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் சீர்திருத்த கிரித்தவ சமயம் அல்லது புரொட்டஸ்டண்டு நெறி தழுவின. தென் ஐரோப்பாவின் பெரும்பகுதி அந்நெறி தழுவாது, கத்தோலிக்க நெறி என்ற பெயர்கொண்ட பழநெறி தழுவிற்று. வட அயர்லாந்து தன் இனத்தாயகமான இங்கிலாந்தைப் பின்பற்றி எளிதில் புரொட்டஸ்டண்டு நெறியணைந்தது. அயர்லாந்துப் பொதுமக்களோ தம்மை அடக்கி ஆண்ட ஆட்சியாளரின் இப் புது நெறியைத் தழுவாமல், கத்தோலிக்கர் களாகவே அமைந்தனர்.

உலகில் அடிமைகளாக வாழும் இனங்கள் அலைக்கழிவுறுதல் இயல்பு. அயர் மக்களோ ஆயிரக் கணக்கான ஆண்டுகள் அடிமைப்பட்டு அல்லலுற்றவர்கள். மேலும் நாகரிகமற்ற இனங்கள் நாகரிக இனங்களுக்கு அடிமைப்பட்டால், நீடித்த அலைக்கழிவு பெறமாட்டா. ஆளும் இனத்திற்கு அவர்கள் விருப்புடனோ, வெறுப்புடனோ எளிதில் அடிமைப்பட்டு நாளடைவில் அவர் களுடன் இரண்டறக் கலந்துவிடுவர். எந்த நாகரிக இனங்களும் சில நாள் போராடி நட்புரிமையால் ஒன்றுபட்டுவிட முடியும். ஆனால் பெருமித வாழ்வு வாழ்ந்த இனம் அடிமையில் வாழவும் முடியாது; எளிதில் மாளவும் முடியாது. என்புருக்கி நோயினால் பீடிக்கப்பட்ட உறுதி வாய்ந்த உடல்போல, அஃது இளைத் திளைத்துப் போராடி வதைபட்டே மாளும். ஆங்கிலேயர் இங்கிலாந்துக்கு வந்து குடியேறி நாகரிகப்படுமுன்பே அயர்