பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

19

நாட்டுமக்கள் நீண்டநாள் நாகரிக வாழ்வு வாழ்ந்த இனத்தவர். பண்டை ஆங்கிலேயராகிய ஆங்கிலோ சாக்ஸானியர் ஜெர்மானியப் பகுதியிலிருந்து பிரிட்டானியாவில் வந்து குடியேறுமுன் பிரிட்டானிய தீவுகள் முழுவதிலும், தென் ஐரோப்பா முழுவதிலும் பரந்து வாழ்ந்தவர்கள். ஆகவே மற்ற எல்லா இடங்களிலும் அவர்கள் இனத்தவராகிய பண்டைப் பிரித்தானியப் பழங்குடி மக்கள் அடிமையுற்றுப் பண்பிழந்து போனபின்பும், அவர்கள் தம் பழைய உலகின் மேல்கோடியில் நின்று போராடினர். ஏழ்மையிலும் பண்பாட்டுறுதியுடன், இழிவிலும் இறுமாப்புடன் அவர்கள் பிரிட்டனின் வல்லமையை திர்த்தற்கான மரபுக் காரணம் இதுவே. உலகில் வேறு எந்த இனமும் நாட்டு விடுதலைக்காக இவ்வளவு நீண்டகாலம் போராடியதில்லை. புலியுடன் போராடும் முள்ளம்பன்றிகள் போல், நச்சுப் பாம்புகளுடன் போராடும் கீரியினம்போல், அவர்கள் எட்டு நூற்றாண்டுகளுக்கு மேலாகப் போராடினர்?

பெர்னார்டுஷா பிறந்தது விடுதலைபெறாத அயர்லாந்தி லேயாயினும், வட அயர்லாந்திலன்று; அயர்லாந்தின் தலை நகரான டப்ளினிலேயே. ஆனால், அவர் குடும்பத்தினர் புரொட்டஸ்டண்டுகள்! அவர் வாழ்க்கையை ஊடுருவி நின்று நிலவி, அவர் பண்புகளை உருவாக்கிய சிறப்புடைய சிறு செய்தி இதுவே. அஃது அவர் குடும்பமரபையே இயக்கி அவர் வாழ்வில் தன் மாறாச் சுவட்டைப் பொறித்தது.

அயர்லாந்தில் புரொட்டஸ்டண்டு நெறி ஒரு சமய நெறி யாக மட்டும் இயங்கவில்லை. ஒரு வகுப்பு நெறியாகவும், ஒரு உள்நாட்டு நெறியாகவுமே இயங்கிற்று. இவ்வகையில் அது புறஉலகிலுள்ள புரெட்டஸ்டண்டு நெறியிலிருந்தும், மற்ற உலகச் சமயநெறிகளிலிருந்தும் பெரிதும் வேறுபட்டது. கிரித்தவம், இசுலாம்,புத்தம், சமணம் முதலிய எல்லா உலகச் சமயங்களுமே நாடு, மொழி, இனம், வகுப்பு, பிறப்பு வேறுபாடு, நிறவேறு பாடு ஆகிய எல்லாவகைப்பட்ட எல்லைக் கோடுகளையும் கடந்து மனித உலகில் பரவியுள்ளன. அவையனைத்துமே மனித உலகை ஒன்றுபடுத்தத்தான் பாடுபடுகின்றன. புற உலகில் புரொட்டஸ் டண்டு நெறியும் சரி, கத்தோலிக்க நெறியும் சரி, இப் பொது அமைதிக்கு விலக்கல்ல. ஆனால் அயர்லாந்துப் புரொட்டஸ்