20
அப்பாத்துரையம் – 8
டண்டு நெறி அயர்லாந்துக்குள்ளேயே பரவ முடியாத ஒன்று - அது பரவ விரும்பியதுகூடக் கிடையாது! மேலே காட்டியபடி, அஃது அயர்லாந்தின் பொதுமரபிலிருந்து உயர்குடிமக்களின் ஆங்கிலமரபைப் பிரித்துக் காட்டும் ஒரு பிரிவினைக் குறியீடாக அம்மரபினருக்கு மட்டும் உரிய ஒருதனி வேறுபாட்டுச் சின்னமாக விளங்கிற்று.
பெர்னார்டுஷா தமக்கு வழக்கமான குறும்பு நகைப்புடனும், முரண்பாட்டுச் சுவைத்திறத்துடனும் தம் நண்பர்களிடம், “நான் ஒருமுதல்தர அயர்லாந்து நாட்டான்; ஆனால், என் குடிமரபு ஹாம்ப்ஷயருக்குரியதே,” என்று கூறுவது வழக்கம். இங்கே ஹாம்ப்ஷயர் என்றது ஆங்கில நாட்டின் மாவட்டங்களுள்(shires) ஒன்றையே. தாம் அயர்லாந்து நாட்டவர் என்பதை ஷா ஏற்கத் தயங்கியதில்லை. ஆனால், ஷா மரபினர் தாம் உயர்குடியாளர் என்றும், ஆங்கில இன மரபு உடையவர் என்றும் ஓயாது வற்புறுத்தி வந்தார்கள்.
ஷா மரபினர் உண்மையில் அயர்லாந்தின் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனினும், அவர்கள் வறுமை அவர் களை இவ் வகுப்பின் மதிப்புத்தரத்தைக் கூடப் பேண முடியாத அளவுக்கு வாட்டி வதைத்தது. பொதுமக்களுடன் ஒன்றுபட்டுப் போகவோ, அவர்கள் செய்துவந்த மதிப்பற்ற உழைப்புத்தொழில் களில் ஈடுபடவோ அவர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் அவர்கள் வறுமை ஏலமாட்டா வீம்புப் பெருமைகளை வலியுறுத்தவேண்டிய தாயிற்று. தம் வறுமையை மறைத்துக் காட்ட அவர்களுக்கு உதவிய பண்புகள் இரண்டே ஒன்று அவர்கள் பழங்குடிப் பெருமை. மற்றொன்று அதற்கு வலிவுதரும் புரொட்டஸ்டண்டு நெறி.
அவர்கள் தங்கள் குடிமரபுக் கொடியைப் பின்னோக்கி ஹாம்ப்ஷயருக்கு எடுத்துச்சென்று, தாம் ஆங்கில மரபில் வந்த வர்கள் என்பதை வலியுறுத்திக் காட்டினர். ஆனால் இத்துடன் அவர்கள் நிற்கவில்லை. அதனை அவர்கள் இன்னும் பின்னோக்கித் தொடுத்தார்கள். ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகத்தில் குறிப்பிடப்பெறும் ஸ்காட்லந்து அரசர் மாக்டஃவ்வுடன் அவர்கள் தம் மரபைத் தொடர்புபடுத்தினர். மாக்டஃவ்வின் மூன்றாவது புதல்வன் ஷேஃய்கை அவர்கள்