அறிவுலக மேதை பெர்னாட்சா
21
தம்குடி முதல்வனாகக் கொண்டனர். இவ் இளங்கோ மரபுரிமைக் கேற்ப, இளங்கோப் பட்ட முடைய பலருடனும் அவர்கள் தொலை உறவுரிமை கொண்டாடினர்.
இவ் வுயர்குடி மரபுரிமையால் அவர்கள் வறுமை பெருகிற் றேயன்றிக் குறைய முடியவில்லை. அதைப் பின்னும் மறைக்க அவர்கள் மேற்கொண்ட பொய்ம்மை ஒழுக்க முறை களுள் புரொட்டஸ்டண்டு நெறியும் ஒரு போலி நெறியாய் உதவிற்று. ஷா குடும்பத்தினர் பலர் புரொட்டஸ்டண்டு நெறியில் முனைத்த தூநெறிக் கொள்கை அல்லது அகத்துறவொழுக்க நெறி (Puritanism) தழுவினர். குடிமறுப்பு, இன்பவாழ்வு மறுப்பு, ஆடையணி எளிமை ஆகியவை இந்நெறியாளர் வற்புறுத்திய உயர் கோட்பாடுகள்.
ஷாவின் தந்தைமரபின் பல பண்புகளுக்கு அவர் பாட்டனும் தந்தையும் எடுத்துக் காட்டுக்கள் ஆவர். அவர் பாட்டனார் டப்ளின் நகரில் ஒரு சட்ட அறிவுரையாளர்(solicitor) ஆக இருந்தார். செல்வமீட்டும் திறனைவிட அவருக்கு அதனைச் செலவிடும் திறன் மிகுதி. குடும்பம் பேணவகை செய்யாமலே, அவர் குடும்பம் பெருக்கி, தம் பின் மரபினரை வறுமையில் உழலும்படி விட்டுச் சென்றார். ஆண்களும் பெண்களுமாகப் பதின்மூன்று பிள்ளை களுடன் அவர் கைம்பெண் மனைவி பெரிதும் அல்லலுற்றார். இப் பிள்ளைகளுள் ஒருவர்தாம் பெர்னார்டுஷாவின் தந்தையாரான ஜார்ஜ் கார் ஷா.
குடும்பத்தினரின் மரபிறுமாப்பு, திறமையின்மை, ஏல மாட்டா நல்லெண்ணம் ஆகியவற்றுக்கு ஜார்ஜ் கார் ஷா பேரிலக் கமாயமைந்தார். அவர் அயர்லாந்து உயர் வழக்கு மன்றத்தில்(four courts of dublin) ஒரு நற்பணியில் அமர்ந்து தொண்டாற்றியிருந்தார். 1850-ல் அயர் பொதுமக்களின் சார்பான கிளர்ச்சிகளின் பயனாய், ஆட்சியாளர் பல செலவினங்களைக் குறைக்கத் திட்டமிட்டனர். அதன் ஒரு பகுதியாக இம்மன்றப் பணித் துறைகள் குறைக்கப் பட்டன. ஜார்ஜ் கார் ஷா இதனால் பணியிழந்தார். ஆயினும் அவருக்கு ஆண்டுக்கு 60 பொன் ஓய்வு உதவிச் சம்பள உரிமை தரப்பட்டிருந்தது. இதைக்கொண்டு அவர் அமைந்து வாழ்ந்தி ருக்கலாம். ஆனால், பேரவாவால் உந்தப்பட்ட அவர் இவ்வுதவிச் சம்பள உரிமையை உடனடிக் காசாக மாற்றிப் பெற்றுக்