22
அப்பாத்துரையம் - 8
காண்டார். கூலவாணிகப் பங்குக் களத்தில் அவர் இத் தாகையை ஈடுபடுத்தி வணிகச் சூதாட்ட மாடி அதனை இழந்தார்.
திறமையின்மையினாலும், ஊதாரித்தனத்தினாலும் ஜார்ஜ் கார் ஷா வெறுங்கையராய்விட்டார். ஆனாலும் அவர் பேரவாவும் பெருமித எண்ணங்களும், அவரை ஓயாது திறமையில்லா முயற்சிகளில் ஈடுபடுத்திக்கொண்டே இருந்தன. இம் முயற்சி களால் குடும்பம் நடத்தப் போதிய வருவாய் அவருக்கு என்றும் கிடைத்ததேயில்லை. ஆனால், தம் குடி மதிப்பை வெளிக்குப் போற்றிக் கொள்ளுமளவுக்கு எப்படி யாவது எதையாவது புரட்டி அவர் கீழ்மேலாக உரு ண்டு கொண்டேதானிருந்தார். நகரில் அவருக்கு ஒரு பண்டக சாலையும் ஒரு பணிமனையும் இருந்தன. நகர்ப்புறத்தில் சற்றுத் தொலைவிற்குள் டால்ஃபின்ஸ் பார்ன்(dolphins barn) என்னும் ஒரு மாவரைக்கும் ஆலை இருந்தது. ஆலையில் மிகுதி வருவாய் கிடைக்காவிட்டாலும், கிடைத்த வருவாய் மூலம் அவர் தம் குடிக்கூலியை மட்டுங் கொடுக்க முடிந்தது. அவர் புறப் பகட்டு வாழ்க்கைச்சகடம் இவ்வாறாகத் தட்டுத் தடங்கலின்றி உருண்டோடிற்று.
ஷாவின் அன்னையார் திருமதி ஷா ஆகுமுன்பு லூஸிந்தா எலிஸபெத் கர்லி என்ற கன்னிப்பெயர் உடைய வராயிருந்தார். அவர் தந்தை வால்ட்டர் பாக்னல் கர்லி என்ற நடுத்தர வேளாண் குடிச் செல்வர். லூஸிந்தா இளமையிலேயே தாயை இழந்தவர். ஆகவே, அவர் தம் சிற்றன்னையாரிடம் வளர்ந்தார். சிற்றன்னை யார் செல்வ முடையவர். தம் செல்வத்தை லூஸிந்தாவுக்கே உரிமையாக்கவும் எண்ணியிருந்தார். ஆயினும் அவர் கண்டிப்பு லூஸிந்தாவுக்குப் பிடிக்கவில்லை. தந்தையும் இதற்கிடையில் மறுமணம் செய்துகொண்டார். பிறப்பகத்திலும் வளர்ப்பகத் திலும் இங்ஙனம் ஆதரவற்ற நிலையில் நங்கை லூஸிந்தா வாழ்வில் கசப்புற்று, தன்னை மணங்கோரிய முதல் ஆடவனை ஆய்ந்தோய்ந்து பாராமல் மணக்கத் துணிந்தாள். இவ்வாடவனே ஜார்ஜ்கார் ஷா. மண வினையின் போது கணவன் 40 ஆண்டினர்; லூஸிந்தாவுக்கு 20 ஆண்டுகளே.