இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறிவுலக மேதை பெர்னாட்சா
73
நாளிலேயே நிறைவேறின. பிறவும் நிறைவேறத் தக்கவையே என்பதில் ஐயமில்லை. அவர் 1892-ல் வெளியிட்ட தேர்தல் அறிவிப்பின் கோரிக்கைகள் பல நிறைவேறியுள்ளன. பல அவர் முயற்சியால் அமைந்த புதிய தொழிற்கட்சியின் திட்டங்களுக்கான அடிப்படைக் குறிக்கோள்கள் ஆயின.
ய
20-ம் நூற்றாண்டு தொடங்குவதற்குள், புகழும் செல்வமும் மறுத்த ஷாவின் வாழ்வின் புகழ்மாதும் செல்வமாதும் புகத் தொடங்கிவிட்டனர்.இவ்விருவரையும் பின்பற்றி, காதல் வெறுத்த அவர் வாழ்வில் அவருடன் ஒத்த காதல் வெறுப்பை யுடைய ஒரு காதல்மாதும் புகுந்தார். இவ் வெல்லா மாறுதலுக்கும் காரணமாயிருந்தது அவர் நாடகமேடைப் போராட்ட வாழ்வின் வெற்றியேயாகும். அப் போராட்டத்தின் போக்கை வரும் பிரிவில் காண்போம்.