பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுலக மேதை பெர்னாட்சா

75

எண்ணிக்கையிலும், ஷேக்ஸ்பியரைத் தாண்டிச் சிறப்புற்று விளங்குகிறார். அவர் நாடக இலக்கிய வாழ்வில் ஈடுபட்ட காலம் 70 ஆண்டுகள். அதனிடையே அவர் எழுதி முடித்த நாடகங்கள் 58.கடைசி நாட்களில்கூட ஒரு நாடகம் புதிதாகத் தொடங்கினார். ஆனால், அதை அவர் முடிக்கமுடியாமல் விட்டுச்சென்றுள்ளார்.

ஷாவின் நாடகங்களிலுள்ள இன்னொரு தனிச்சிறப்பு அவற்றில் காதலுணர்ச்சி ஈடுபாடு அகற்றப்பட்டிருப்பதும், அவ்வுணர்ச்சியார்வத்தினிடமாக உள்ளார்ந்த அன்பொழுக்க ஆர்வம் இடம்பெறுவதுமாகும். தவிர, அறிவாராய்ச் சியிலிறங்கு பவர் கலைப்பண்பைப் பேணுதல் அரிது. ஷா, ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய் போன்ற இயற்கைக் கலைஞராதலால், உணர்ச்சி யில்லாமலே கலைப்பண்பூட்டவல்லவராயுள்ளார். அறிவா ராய்ச்சியால் மட்டுமன்றி, உணர்ச்சிவகையிலும் உயர்கலைப் பண்பை அவர் எட்டமுடியும் என்பதற்குக் 'காண்டிடா’ "அருள் திரு.ஜோன்' போன்ற நாடகங்கள் சான்றுபகரும்.

வாழ்வில் ஷா எதிர்ப்பில் வளர்ந்தது போலவே, நாடகக் கலையிலும் எதிர்ப்பில் வளர்ந்தவர் ஆவர். அவர் நாடகக் கலையில் வெற்றிபெறுமுன் எத்தனையோ தடையரண்களைத் தகர்த்துத் தமக்கென ஒரு புதுச் சூழ்நிலை உண்டுபண்ணிக் கொள்ளவேண்டியதாயிருந்தது. உணர்ச்சி நாடக மரபை ஒழித்து, ஒழுக்க, அறிவுரை நாடகமரபையும், அறிவாராய்ச்சி நாடக மரபையும் அவர் உண்டுபண்ண வேண்டியிருந்தது. அத்துடன் உயர்தர நாடக மேடைகள் செல்வராட்சியிலிருந்தன. செல்வ வகுப்பினரின் இன்பப்பொழுதுபோக்கை எதிர்பார்த்து,அவர்கள் ஆதரவில் அவை நடைபெற்றன. ஷாவின் நாடகங்களும் பிற புதுமை நாடகங்களும் அவற்றில் நுழைவுச்சீட்டுப் பெறமுடிய வில்லை. ஷா வெளியில் நின்று முற்றுகையிட்டுப் போராடியே அதனுள் நுழைய வழியுண்டாக்கவேண்டி வந்தது.செல்வராட்சி யிலில்லாத ‘விடுதலை அரங்கு' போன்ற புதுமை மேடையோ, உயர்தர நடிகர்களால் புறக்கணிக்கப்பட்டவை. உயர்தர நாடகங் களுக்கேற்ற துணைப்பொருள் கருவிகள் அவற்றிற்கு இல்லை. ஷாவின் பல நாடகங்கள் புதுமை அரங்குகளில் நடத்தப்படக் கூடாதவையாயும், செல்வ மேடைகளில் நுழைவு பெறாதவை யாயும், மேடையேறாமல் நெடுநாள் காத்திருக்கவேண்டி வந்தது.