76
அப்பாத்துரையம் – 8
இறுதியாக, நாடகம் பார்க்க வரும் காட்சியாளர்கள் உணர்ச்சி நாடக மரபை எதிர் பார்த்தவர்கள். அவர்கள் மனப்பழக்க மரபை மாற்றிப் புதிய காட்சியாளர் குழுவை ஷா உண்டுபண்ண வேண்டியிருந்தது. இவ்வளவு தடையரண்களையும் பிற எதிர்ப்புக் களையும் தனி நின்று சமாளித்து வென்ற கலைஞர், கலையுலகில் ஒரு புரட்சிக்காரரேயன்றோ?
சிறுவராயிருக்கும்போதே ஷா ஷேக்ஸ்பியரைப் பின் பற்றிச் செந்தொடையாப்பியல்(Blank Verse) கோவிலக நாடக முறையில் (Passion Play) ஒரு நீண்ட நாடகம் எழுதியிருந்தார் என்று குறித்துள்ளோம். அவர் உள்ளார்ந்த நாடகப் பண்பையும் ஆர்வத்தையும் இது காட்டுகிறது.1885-ல் புனைகதைகளில் அவர் மனக்கசப்புற்ற பின் மீண்டும் நாடகத்தில் கருத்துச் செலுத்தத் தொடங்கினார். அவர் கலைநண்பர் வில்லியம் ஆர்ச்சர் தாம் இயற்றிய கதைக்கு உரையாடல் வகுத்து நாடகமாக்கும்படி ஷாவை வேண்டினார். ஷாவின் சீர்திருத்த ஆர்வமும் வசைப் பண்பும் கதையை மாற்றி, மக்கள்வாழ்க்கையின் ஒரு பெருஞ் சீர்கேட்டைத் தாக்குவதாக அமைத்தன. அத்துடன் ஆர்ச்சரின் கதை முழுவதும் ஒரு காட்சியுள் அடங்கிவிட, ஷா அதனைத் தொடர்ந்து பிற காட்சிகள் சேர்த்தார். நாடகத்தை ஆர்ச்சருக்கு வாசித்துக் காட்டும்போது அவர் தூங்கியதாக எண்ணி, ஷா அதனைக் குப்பைக்கூடையில் எறிந்தார். தாம் உண்மையில் தூங்கவே யில்லையென்றும், தம் விருப்பின்மையைக் காட்டவே அவ்வாறு பாசாங்கே செய்ததாகவும், ஆர்ச்சர் பின்னாட்களில் ஒத்துக் கொண்டுள்ளார். ஆயினும், இந் நிகழ்ச்சி ஷாவின் கலைப் படைப்பை ஏழாண்டுகள் ஒத்திப்போடப் போதியதாயிருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் வேபியன் கழகம் முதலிய ஒப்பியல் நெறி, புதுமைக் கழகங்களின் வளர்ச்சியாலும்; ஐரோப்பாவிலிருந்துவந்த இப்ஸனின் புது நாடக, புதுமைப்பெண் இயக்க அலைகளாலும், இங்கிலாந்தில் புதுமையார்வம் மிகுதிபரந்து வந்தது. புதுமை இதழ், புதுமைக் கலை, புதுமை அரசியல் என எல்லாத் துறையிலும் புத்தூழியின் புதுமையார்வம் புகுந்தது. இதன் பயனாக இப்ஸனின் புதுமை நாடகத்துறைக்கு ஆதரவு ஏற்பட்டது. செல்வர் மேடைகள் இவ்வியக்கத்தை எதிர்த்ததனால், இத்துறை நாடகங்களுக்கென ‘விடுதலை அரங்கு’' எனப் புதியமேடை அமைக்கப்பட்டது.இதன்