பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

அப்பாத்துரையம் – 8

தூற்றுரைகளாகிய கடற்கொந்தளிப்பில் புதுமை மேடையின் பெயரும், ஷாவின் பெயரும் மிதந்தன. ஆனால், ஷா புறக்கணிப் பிடையே ஆண்டு தோறும் ஒரு புனைகதை எழுதத் தயங்காதவர் அன்றோ? புறக்கணிப்பைவிட இதழ் ஒரு கலைப்படைப்பின் ஆற்றலுக்கு நல்ல சான்று என்பதை அவர் அறிந்தவர். ஆகவே, அவர் தம் ஆற்றல் உணர்ந்து ஊக்கம்பெற்று மீண்டும் நாடகங்கள் எழுதினார்.

ஷாவின் அடுத்த நாடகம் “காதல் வேடர்” என்பது. இது 1893-ல் எழுதப்பட்டது.புத்தூழியின் புதுமைப் பெண் இயக்கத்தை இது நேரடியாகச் சித்திரிப்பது. ஷாவும் ஃவேபியன் கழகமும் இப்ஸனியத்தை அவா ஆர்வத்துடன் பரப்பிவந்த காலம் இது. ஆனால், ஷாவின் இப்ஸனியம் இப்ஸனைப் பின்பற்றி யமைந்த தன்று. இப்ஸனும் ஷாவும் ஒருங்கே இப் புத்தூழியின் படைப் பாளிகள் ஆவர். எனவே ஷாவின் இப்ஸனியத்தை நாம் ஷாவியம் என்றுகூடக் கூறலாம். இங்கிலாந்தில் அது இப்ஸனியத்தைத் தாண்டி வளர்ச்சியடைந்து ஷாவியம்(Shavinism) என்றே பெயர் பெறுகிறது. ‘காதல் வேடரி’ல் இப்ஸனின் கருத்துக்கள் மட்டு மன்றி, இப்ஸனே தன் அரையுருவச் சிலை வடிவில் ஒரு உறுப்பினனாய் இயங்குகிறான் என்னலாம். வாய் பேசாத அச்சிலை வாய்பேசு பவரினும் மிகுதியாகப் பிறரைத் தூண்டி யியக்கும்படி செய்யப் படுகிறது. ஷாவின் தனி வாழ்க்கை நிகழ்ச்சிகளும், பண்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன. பெண்மைக்கும் காதலுக்கும் இடம் கொடாத அவர் புற வாழ்க்கைக் கோட்டையில் திருமதி செல்வி பாட்டர்ஸனும், ஃபிளாரென்ஸ்வாரும் செய்த தாக்குதல் நிகழ்ச்சிகளின் நிழற் படிவம் இந்நாடகத்தில் காணப்படுகிறது.

இந் நாடகத்தின் நடிப்புக்கு உயர்தர நடிகரும், உயர்தரச் செல்வ மேடையின் நடிப்புவாய்ப்புக்களும் இன்றியமையாத் தேவைகளாயிருந்தன. ‘விடுதலை அரங்'கில் இவற்றுக்கு இட மில்லை. எனவே 1905-வரை இது மேடையேற முடியாமலே போய்விட்டது.

1893-ம் ஆண்டிலேயே ஷா 'திருமதி.வாரனின் வாழ்க்கைத் தொழில்' என்ற தம் மூன்றாவது நாடகத்தை எழுதி முடித்தார்.