பெஞ்சமின் பிராங்ளின்
93
உண்மையில் ஆட்சியாளர் ஆதரவை நான் நம்புவது என் நண்பர்களில் சிலருக்காவது தெரிந்திருந்தால், ஒரு நன்மை கட்டாயம் விளைந்திருக்கும். அவரிடம் நம்பிக்கை வைப்பது தகாது என்று என்னைவிட அவரிடம் நன்கு பழகிய யாராவது எச்சரிக்கையுரை தந்திருப்பார்கள். ஏனெனில், தம் வாய்மொழிப் படி நடக்கும் எண்ணம் சிறிதும் இல்லாமலே தாராளமாக வாக்களிப்பது அவரது பண்பு என்பதை நான் பின்னாட்களில் கேள்வியுற்றேன். எனினும் அன்றைய நிலையில் நான் கேளாமலே வந்து எனக்கு உதவுவதாகக் கூறிய ஒருவரின் தாராள மொழி களை நான் எப்படிப் பொய்யுரைகள் என்று கருதவோ, ஐயுறவோ, று முடியும்? உண்மையில் உலகத்திலேயே மிக நல்ல நெஞ்சம் படைத்த மனிதருள் அவர் ஒருவர் என்றுதான் அன்று நான் எண்ணினேன்?
ஒரு சிறிய அச்சகத்துக்கான கருவிப் பட்டியல் ஒன்றை நான் அவரிடம் தந்தேன். என் கணக்குப்படி அதன் மதிப்பு ஒரு நூறு பொன் அளவாயிற்று. அவர் பட்டியலைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தார். அத்துடன் நானே நேரில் இங்கிலாந்துக்குச் சென்று, அங்கே அச்சுக்களையும் மற்றக் கருவிகளையும் நல்லவையாகப் பார்த்து வாங்கினால் இன்னும் மிகப் பயனுடையதாயிருக்கும் என்றும் கருதினார். "மேலும் நீங்கள் அங்குப் போவதனால் இன்னும் பல நன்மைகள் ஏற்பட வழியுண்டு. அங்கே பலருடன் நீங்கள் அறிமுகம் கொள்ள நேரும். குறிப்பாக, பணிமனைக் கருவி வணிகர், புத்தக வணிகர் ஆகியவருடன் அறிமுகம் பெறுவதும் அவர்களுடன் எழுத்துப் போக்குவரவு ஏற்படுத்திக் கொள்வதும் மிகவும் நலம் பயப்பதாகும்,” என்று அவர் வாதிட்டார்.
நான் அவர் கூறியவற்றை ஒத்துக் கொண்டேன். அச்சமயம் பிலடெல்பியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஒரே ஒரு கப்பல்தான் ஓடிக்கொண்டிருந்தது. அது ஆனிஸ் (Annis) என்ற பெயருடையது.அதுவும் ஆண்டுக்கு ஒரு தடவைதான் பிரயாணம் செய்தது. அதிலேயே புறப்படும்படி ஆட்சியாளர் அறிவுரை கூறினார்.
ஆனிஸ் புறப்பட இன்னும் பல மாதங்கள் இருந்தன. ஆகவே, நான் எப்போதும் போலத் தொடர்ந்து கெய்மரிடம் வேலை பார்த்து வந்தேன்.