பக்கம்:அப்பாத்துரையம் 9.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

அப்பாத்துரையம் - 9

விற்பனையாளரையே.நான் அவர் கடிதத்தை அவரிடம் கொடுத்து, ஆட்சியாளர் கீத்தினிடமிருந்து பெற்ற கடிதம் என்று விவரம் கூறினேன்.“அப்படி ஒரு ஆள் இருப்பதாகவே எனக்குத் தெரியாது” என்று கூறினார் அவர். ஆனால், கடிதத்தை உடைத்துப் பார்த்ததும், “ஓ, இது ரிடில்ஸ்டன் (Riddlesden) இடமிருந்து வந்த தாயிற்றே.” என்றார்.எனினும் அடுத்தகணமே அவர், "இந்த ரிடில்ஸ்டன் ஒரு படுபோக்கிரி என்பதை அணிமையில்தான் கண்டேன். அவருடன் எனக்கு எந்தத் தொடர்பும் வேண்டா, அவரிடமிருந்து எனக்குக் கடிதங்களும் தேவையில்லை,” என்றார். கடிதத்தை அவர் என் கையிலே தந்துவிட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு யாரோ வாடிக்கைக்காரரைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

இக்கடிதங்கள் ஆட்சியாளரிடமிருந்து வந்தவையல்ல என்று கண்டதே நான் மலைப்படைந்தேன்.நடந்தவையா வற்றையும் நினைத்துப் பார்த்து, அவருடைய உள்ளார்ந்த வாய்மையில் எனக்கு ஐயுறவு ஏற்பட்டது. என் நண்பர் டெனமைக் கண்டு இதைப் பற்றி நான் குறிப்பிட்டேன், அத்துடன் செய்திகள் அனைத்தையும் விடாது விளக்கமாகத் தெரிவித்தேன். அவர் கீத்தின் பண்பியல்பு இன்னது என்பதை எனக்கு அறிவுறுத்தினார்.கீத் எனக்கு எத்தகைய கடிதமும் கொடுத்தனுப்பியிருக்கமுடியாது என்றும் அவர் கருதினார். ஏனென்றால் அவரை அறிந்த எவரும் அவரிடம் ஒரு சிறிதளவு நம்பிக்கையும் வைத்திருக்க மாட்டார்கள். எனக்கு நம்பிக்கை மீது கடன் தரும்படி ஆட்சியாளர் பரிவுரைக் கடிதங்கள் தருவதாகச் சொன்னதைக் கேட்டுத் திரு. டென்ஹாம் விலாப் புடைக்கச் சிரித்தார்.அவரையே ஒருவரும் நம்பாத போது, என்னை நம்பும்படி அவர் என்ன பரிந்துரை அளிக்க முடியும் என்று கேட்டார்.

இனி இங்கிலாந்தில் என்ன செய்வது என்ற புதிய கவலை எனக்கு எழுந்தது. இதுவரையில் திரு டெனம் எனக்கு அறிவுரை தந்தார். ஏதேனும் வேலை பார்த்து அதில் அமர்வதே தற்போதைக்கு நல்லது என்று அவர் கருதினார். "இங்குள்ள அச்சக முதல்வர் களிடமிருந்தால் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். திரும்ப அமெரிக்கா சென்று தொழில் தொடங்கும் போது, அது உங்களுக்குப் பெருநலம் அளிக்கும்” என்றார்.