பெஞ்சமின் பிராங்ளின்
109
பொருள் வாணிகர், ஆகியவர்களிடம் படிபகர்ப்பாளராக (Copyist) இடம் நாடினார். ஆனால், அங்கேயும் வேலைக்கான டம் எதுவும் இல்லை.
எனக்கு உடனடியாகத்தானே பாமர்ஸில்32 இடம்கிடைத்தது. அது பார்தலோமியூ குளோஸி (Bartholomw Close)லுள்ள பேர்போன ஓர் அச்சகம். இதில் நான் ஓர் ஆண்டு வேலை பார்த்தேன். நான் போதிய அளவு சுறுசுறுப்புடன்தான் வேலை செய்தேன்.ஆனால் நான் ஈட்டிய பணம் முழுவதையும் நாடகங்கள் முதலிய பொழுதுபோக்குகளில் ரால்ப் வீண் செலவு செய்து அழித்து விட்டார். என் கையிலிருந்த பணம் முழுவதையும் செலவழித்த பின், இருவருமே கைக்கும் வாய்க்குமாக முட்டுப் பட்டுக் கழித்தோம்.
73. என் வாழ்க்கையின் இரண்டாவது பெரும்பிழை!
தமக்கு ஒரு மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள் என்பதை அவர் முற்றிலும் மறந்து வாழ்ந்தார். நானும் செல்வி ரீடுடன் மணஉறுதி செய்து கொண்டதைப் படிப்படியாக மனத்திலிருந்து நழுவவிட்டு விட்டேன். செல்வி ரீடுக்கு நான் ஒரே ஒரு கடிதம் மட்டுமே எழுதினேன். அந்தக் கடிதமும் நான் திரும்பிச் செல்ல நாளாகும் என்பதைத் தெரிவிக்கும் கடிதமாகவே அமைந்தது.
என் வாழ்க்கையின் இரண்டாவது பெரும்பிழை இதுவே, நான் மீண்டும் ஒரு தடவை வாழ்வதானால், இதைத் திருத்த மிகவும் விரும்புவேன்.
என் இக்கால இங்கிலாந்து வாழ்வைப் பற்றிய பேருண்மை யாதெனில், திரும்ப அமெரிக்கா செல்வதற்கான பணம் என்றும் கையில் தங்காத வகையில் எங்கள் செலவுகள் இருந்தன என்பதே.
பாமர்ஸில் நான் வொல்லாஸ்டனின் "இயற்கைச் சமயம்” (‘Religion of Nature' by Wollaston) என்ற நூலின் இரண்டாம் பதிப்பை அச்சுக்கோக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். அவர் வாதங்களில் சில வழு உடையவையாக எனக்குத் தோன்றின.நான் விடுதலை, இன்ப துன்பம் ஆகியவை பற்றிய ஆராய்ச்சிக்