பக்கம்:அப்பாத்துரையம் 9.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெஞ்சமின் பிராங்ளின்

139

என்னிடம் கொண்டுவந்து சேர்த்தார். அவர் மூலம் எங்களுக்குக் கிடைத்த ஐந்து வெள்ளிகள் நாங்கள் ஈட்டிய முதல் பொருள் என்ற முறையில் எங்களுக்கு அருமையாயிருந்தது. அத்துடன் பல்வேறு சிறு செலவுகளில் எங்கள் கைப்பணம் முழுவதும் செலவாய் விட்டதனால் 'காலத்தில் கைவந்த அந்த வெள்ளிகள் பிற்காலத்தில் பொன்னால் நாங்கள் அடைந்ததை விட மிகுதி மகிழ்ச்சியை எங்களுக்கு அளித்தன. ஹெஸிடம் நான் கொண்ட நன்றியுணர்வின் காரணமாக, என்னைப்போல வாழ்க்கை தொடங்கிய இளைஞர்களுக்கு நான் எப்போதும் முன்னிலும் இரட்டிப்பு விருப்புடன் என்றும் தயங்காமல் உதவி வந்திருக் கிறேன்.

99. அழுகைக்காரக் கோணங்கி

'காலங்கெட்டுப் போயிற்று' நாடு கெட்டுப்போயிற்று' என்று மூக்கால் கதறுபவர்கள் எல்லா நாட்டிலுமே இருக்கிறார்கள். பிலடெல்பியாவிலும் அத்தகைய ஒரு பேர்வழி இருந்தார். அவர் சாமுவேல்மிக்கில் (Summuel Mickle) என்ற ஒரு மதிப்பு வாய்ந்த வயது சென்ற மனிதர். அவர்அறிவார்ந்த பார்வையும் வீறமைந்த பேச்சும் நடையும் உடையவர். எனக்கு அவர் முற்றிலும் அறிமுக மற்றவராயிருந்தாலும், ஒரு நாள் என் அச்சகத்தின் வாசலில் வந்து நின்று கொண்டு, 'அப்பனே, அணிமையில் யாரோ புதிதாக ஒரு அச்சகம் திறந்ததாகச் சொல்கிறார்களே, அந்த இளைஞர் நீர்தானா?' என்று கேட்டார் நான், 'ஆம்' என்று ஒத்துக்கொண்ட உடனே, அவர் என் பெயர் கூறி ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டார்.

66

"அப்பனே, உனக்காக நான் மனமார வருந்துகிறேன்' இது மிகவும் பணச் செலவுடைய முயற்சியாயிற்றே! அந்தச் செலவும், முயற்சிகள் அத்தனையும், விழலுக்கிறைத்த நீராயிற்றே; பிலடெல்பியா அழிவை நோக்கி நேரே சென்றுகொண்டிருக்கும் இடம்: இங்குள்ள மக்கள் எல்லாருமே கடனில் மூழ்கிவிட்டவர்கள், அல்லது கிட்டத்தட்டத் தம் செல்வத்தின் அளவுக்குக் கடன் வாங்கி, அந்தக் கடனில் மிதப்பவர்கள். புதிய கட்டடங்கள் இந்நகரில் எழலாம்; குடிக்கூலி உயரலாம். ஆனால் இவற்றை யெல்லாம் நம்பியவர்கள் மோசம் போவார்கள். அவை போலித்