142
அப்பாத்துரையம் - 9
general) ஆனார். அவர் புத்தக ஆர்வமுடையவர். சிற்சில சமயம் செய்யுளியற்றுவதும் உண்டு.
வில்லியம் பார்சன்ஸ் (William Parsons) பயிற்சி முறையில் ஒரு செருப்புத் தொழிலாளர்.படிப்பார்வமுடையவர். சோதிடம் பயிலும் நோக்கத்துடன் அவர் முதலில் கணக்கியலின் பெரும் பகுதி கற்றார். ஆனால், பிற்பட அவர் சோதிடத்தை நையாண்டி செய்ய முற்பட்டார். அவரும் பின்னாட்களில் நிலப்பேரளவை யாளர் ஆனார்.
வில்லியம் மாக்ரிட்ஜ் (William Maugridge) ஒரு தச்சுத் தொழிலாளர். அவர் மிகச் சிறந்த பொறித்துறைக் கைவினை யாளர் (Mechanic). அவர் மிகவும் கூரிய அறிவும் திடமான செயல் திறமும் உடையவர்.
ஹியூ மெரிடித், ஸ்டீபென் பாட்ஸ், ஜார்ஜ் வெப் ஆகிய மூவரையும் வேறு துறைகளில் குறிப்பிட்டு விளக்கம் தந்திருக்கிறேன்.
ராபர்ட் கிரேஸ் (RobertGrace) ஒரு சிறிது செல்வ வளமுடைய இளைஞர். அவர் பெருந்தன்மையுடையவர். கிளர்ச்சியும் நகைத்திறமும் உடையவர். சிலேடையாகப் பேசவல்லவர். நண்பர்களுடன் நன்கு அளவளாவுபவர்.
நான் கடைசியாகக் குறிப்பிடுவது ஒரு வணிகரிடம் எழுத்தாளராயிருந்த வில்லியம் கோல்மன் (William Coleman) என்பவரையே. அவர் வயது என் வயதிருக்கும். நான் கண்ட மனிதர்களிடையே ஒழுக்கமான வாழ்க்கை முறையிலும் அன்பு
கனிந்த உள்ளத்திலும், அமைதிவாய்ந்த தெளிவுமிக்க அறிவாண்மையிலும், தலைசிறந்தவர் அவரே. பின்னாட்களில் அவர் புகழ்மிக்க வணிகராகவும் மாகாண முறைமன்ற நடுவராகவும் திகழ்ந்தார். நாற்பது ஆண்டுகளாக, அவர் வாழ்வின் இறுதிவரை எங்கள் இருவரிடையேயிருந்த நட்பு இடையறாது நீடித்திருந்தது. கிட்டத்தட்ட அவர் வாழ்நாள் அளவில் எனது கழகமும் தொடர்ந்திருந்தது.
102. மாகாணக் கழகங்களின் மூலத் தாய்க்கழகம்
இக்கழகமே மெய்விளக்கம், ஒழுக்கத்துறை, அரசியல் ஆகியவற்றில் அம்மாகாணத்திலுள்ள கழகங்கள் எல்லா