162 ||-
அப்பாத்துரையம் - 9
முயற்சி. பொதுமக்களிடமிருந்து பணம் பிரித்து நடத்தப்படும் நூலகமாக உருவாயிற்று. அதற்கான சட்ட திட்டங்களை நான் வகுத்தேன். அச்சமயம் நம் நாட்டவரிடையே மிகப் பெரிய பத்திர எழுத்தாளரான பிராக்டனின் (BROCKDEN) உதவி எனக்குக் கிடைத்தது. அவர் சட்ட திட்டங்களை ஒழுங்குபடுத்தித் தந்தார். ‘ஜண்டோ’வில் உள்ள என் நண்பர்கள் உதவியுடன் நான் 50 பங்கு (Subscribers) வரியாளர்களைச் சேர்த்தேன். அவர்கள் ஒவ்வொரு வரும் தொடக்கத்தில் ஆளுக்கு 40 வெள்ளி கொடுத்ததுடன், ஆண்டுக்கு 10 வெள்ளி வீதம் 50 ஆண்டுகளுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி செய்தார்கள். இக்கூட்டு ஐம்பதாண்டு நீடித்து நிலவவேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த வகையறை செய்யப்பட்டது. பங்கு வரியாளர் தொகை விரைவில் 100-ஆகப் பெருகிவிட்டதனால், நாங்கள் கூட்டுக் கழகத்துக்கு ஓர் உரிமைப் பத்திரம் கோரிப் பெற்றோம்.
124. அமெரிக்க நூலகங்களின் தாய் நிலையம்
இந்த நூல்நிலையக் கழகமே வட அமெரிக்காவில் பங்குவரிப் பணமூலம் அமைந்த எல்லாப் பொது நூலகங்களுக்கும் தாயகம் ஆகும். அந்நூலகங்கள் எண்ணற்றவை ஆகிவிட்டன. தவிர, தாய்நூலகமே ஒரு மாபெருநிலையமாய், இன்றும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
125. நூலகங்களின் நல்விளைவுகள்
இந்நூலகங்கள் அமெரிக்க மக்களுக்குச் செய்துள்ள நலங்கள் மிகப் பல; மிகப் பெரியன. அவை அமெரிக்கரின் பொது உரையாடல் திறத்தையே வளர்த்திருக்கின்றன. மற்ற நாடுகளின் உயர்குடி மக்களுக்கு ஒப்பான அறிவுத்திறத்தை அது இந்நாட்டு வணிக மக்களுக்கும், வேளாண் மக்களுக்கும் அளித்துள்ளது. நம் குடியிருப்பு நாடுகளில் எங்குமே மக்கள் தங்கள் உரிமைகளைக் காப்பதில் கொண்டுள்ள தலையான அக்கறைக்கு இவையே பெரிதும் காரணமாவன என்று கூடக் கூறலாம்.
குறிப்பு : நூல் தொடக்கத்தில் குறிக்கப்பட்ட நோக்கத்துடன்57,
தன் வரலாறு இதுகாறும் எழுதப்படாத பல சிறு குடும்ப