பெஞ்சமின் பிராங்ளின்
171
காரியகாரண உணர்வைக் கெட்ட காரியங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பார்ப்பர். ஆனால் பெரியீராகிய தாமோ, நல்லது, தொலையறி வுடையது. நற்செயலில் முடிவது, என்ற மூன்று இலக்கணங்களையும் ஒருங்கே உடைய செய்திகளுக் கல்லாமல் வேறு எதற்கும் தம் கையொப்பம் தருவதில்லை. டாக்டர் பிராங்க்லினின்4 வாழ்க்கையில்தான் நான் இப்பண்புகளைக் கண்டிருக்கிறேன். ஆனால், இதே பண்புகள் உங்கள் வாழ்க்கை வரலாற்றிலும் இணைந்து மிளிர்கின்றன.
V. வெற்றியின் மறைதிறவு
உங்கள் வாழ்க்கைத் தொடக்கத்தைப் பற்றிக் கூற நீங்கள் தயங்கவில்லை. அதுபற்றி எதைக் கூறவும் நீங்கள் வெட்கப்பட வில்லை. இதன் மதிப்பும் வாய்மையும் தனிப்பட அரும் பயனு டையவை. ஏனென்றால், ஒருவர் இன்ப வாழ்வுக்கு, ஒழுக்கத்துக்கு, பெருந்தகைமைக்கு, பிறப்பின் சிறப்பு எவ்வகையிலும் தேவை யில்லை என்பதை நீங்கள் காட்டியிருக்கிறீர்கள் இது மிக முக்கிய மான படிப்பினை, இதுமட்டுமன்று எந்த விளைவுக்கும் ஒரு மூல காரணம், வகைதுறை இருந்தாக வேண்டும். தங்கள் வெற்றிக்கு வழி வகுத்த அந்த மூலகாரணத்தையும் நீங்கள் தெளிவாக்கி யுள்ளீர்கள். அது நீங்கள் தாமாகவே தங்கள் வாழ்வுக்கு வகுத்துக் கொண்ட திட்டம் ஆகும். விளைவு எவர் உள்ளத்தையும் மகிழ் விக்கவல்லது; மலைக்க வைக்க வல்லது. ஆனால், வகைதுறையோ தங்கள் மெய்யறிவால், மிக மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் நிறைபயனின் மறைதிறவு யாதெனில், இது இயற்கை, ஒழுக்கம், சிந்தனை, பழக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதே.
குறிப்பிடத்தக்க மற்றொரு செய்தி தங்கள் பணிவார்ந்த பொறுமையே. உலக அரங்கில் வந்து தோற்றமளிப்பதற்குரிய தகுதிவரும்வரை ஒவ்வொரு மனிதனும் காத்திருக்கவேண்டும் என்று உங்கள் வாழ்வு காட்டியுள்ளது. பொதுவாகப் பலர் வெற்றிக்குரிய கணத்தை மட்டுமே எண்ணிக் காத்திருப்பர்; ஆனால். வாழ்வு ஒரு கணத்துடன் தீர்ந்துவிடாது அந்தக் கணத்தை அடுத்து எண்ணற்ற கணங்களில் அது தொடர் வேண்டும். ஆகவே, வெற்றியளிக்கும் கணத்துக்கு மட்டும் ஒருவன் தகுதி பெற்றால் போதாது; வெற்றிக்கு முன்னேற்பாடான