பக்கம்:அப்பாத்துரையம் 9.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 9

178) |- பிலாடெல்பியாவிலும் அச்சுத்தொழில் முதல்வரே பணிமனைப் பொருள் விற்பனைக்காரராகவும் இருந்தனர். அவர்கள்கூட ஆண்டுப்பட்டிகள் நாட்டுப்பாடல் நூல்கள், ஒரு சில பள்ளிப் புத்தகங்கள் ஆகியவற்றையே வைத்துவிற்றனர். புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வமுடையவர்கள் இங்கிலாந்திலிருந்துதான் புத்தகங்கள் வருவிக்க வேண்டியிருந்தது.

எங்கள் ஜண்டோவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் ஒருசில புத்தகங்கள் இருந்தன. இப்போது நாங்கள் அதைத் தேறல் அருந்தகத்தில் நடத்தவில்லை. கழகத்தை நடத்துவதற் கென்று ஓர் அறையை வாடகைக்கு அமர்த்தியிருந்தோம். அந்த இடத்துக்கு எல்லார் புத்தகங்களையும் கொண்டுவந்து தொகுத்து வைக்க நான் ஏற்பாடு செய்தேன். எங்கள் வாதக்கூட்டங்களில் அவை பயன்பட்டன. அத்துடன், பொதுவாகவும் மிகவும் நல்ல பயனுடையவையாயிருந்தன. உறுப்பினர் எவரும் தத்தமக்குத் தேவையான புத்தகத்தை இரவலாகப் பெற்று வீட்டுக்குக் கொண்டு போய், வாசிக்க உரிமை பெற்றிருந்தோம். இது கொஞ்ச நாள் நடைபெற்றது.எல்லாருக்கும் மனநிறைவளித்தது.

2. பங்குவரித் திட்டம்

இந்தச் சிறு புத்தகத் தொகுதியால் இவ்வளவு நற்பயன் ஏற்பட்டது கண்டதே, இன்னும் பரந்த பொது அடிப்படையில் பங்கு வரிப் பணத்தால் நடத்தப்படும் ஒரு பொது நூல்நிலையம் தொடங்க முற்பட்டேன். அதற்கு வேண்டிய திட்டம், விதிகள் ஆகியவற்றை வகுத்து, திரு.சார்ல்ஸ் பிராக்டென் என்ற ஒரு திறமை வாய்ந்த பத்திர எழுத்தாளரிடம் கொடுத்து, பொது ஒப்பந்த வடிவமாக உருவாக்குவித்தேன். அதன்படி அதன் கீழே கையொப்பமிட்ட ஒவ்வொருவரும் முதற் புத்தகத் தொகுதி வாங்குவதற்காக ஒரு தொகுதியை உடனடியாகக் கொடுக்கவும் அதன் பின் ஆண்டுதோறும் அதன் வளர்ச்சிக்கு ஓர் ஆண்டுத் தொகை செலுத்தவும் தங்கள் உறுதிமொழி கொடுத்தனர்.

அச்சமயம் பிலடெல்பியாவில் புத்தகம் வாசிப்பவர் மிகமிகச் சிலர்; அவர்களுள்ளும் பெரும்பாலானவர் ஏழைகள். ஆகவே, நான் எவ்வளவோ விடாப்பிடியாக முயன்றும், ஐம்பது பேருக்குமேல் சேரவில்லை. அவர்களும் பெரும்பாலும் வணிக