பெஞ்சமின் பிராங்ளின்
185
அமைச்சர் நட்பு முறையில் என்னிடம் வந்து, அவர் கூட்ட நடவடிக்கையில் கலந்து கொள்ளாமலிருப்பதைப் பற்றிக் கடிந்துரைப்பார். இதனால் நாலைந்து ஞாயிற்றுக் கிழமைகளுக்கு ஒரு தடவை நான் அவரது வற்புறுத்தலுக்கு இணங்கி, அக்கூட்டத்தில் கலந்து கொள்வதுண்டு.
ஞாயிற்றுக்கிழமையின் ஓய்வுநேரம் எனக்கு என் வாசிப்புக்கு எவ்வளவோ தேவையாயிருந்தது. இருந்தபோதிலும், அமைச்சர் மிகச் சிறந்த சமய உரையாளர் என்று எனக்குத் தோன்றியிருந் தால், நான் நாலைந்து ஞாயிற்றுக்கிழமைக்கு ஒரு தடவையன்று, அதைவிட அடிக்கடி அக்கூட்டங்களுக்குச் சென்றே இருப்பேன். ஆனால், அமைச்சரின் சமய உரைகள் பெரிதும் சமயநூல்களின் தருக்க வாதங்களாகவோ, எங்கள் கிளைச் சமயத்தின் தனிப்பட்ட சிறப்புக் கோட்பாடுகளின் விளக்க விரிவுரையாகவோ மட்டும் தான் இருந்தன.அவை எனக்கு உணர்ச்சியற்றவையாகத்தோன்றின. அவை ஆர்வத்தையோ, கிளர்ச்சியையோ தூண்டவில்லை. வாழ்க்கைக்கான அறிவுரைக் கூடத்தரவில்லை.மேலும், அவற்றில் ஒரு வரிகூட ஏதேனும் ஓர் ஒழுக்க மெய்ம்மையை அறிவுறுத்துவ தாகவோ, வலியுறுத்துவதாகவோ அமையவில்லை. சமய உரை முழுதும் எங்களை நல்ல கழகச் சமயத்தவர்களாக்கும் நோக்க முடையாதாகவே இருந்தது. நல்ல நாட்டு மக்களாக்கும் நோக்கம் அதில் சிறிதும் இல்லை.
ஏ
ஒரு நாள் அவர் விளக்க எடுத்துக்கொண்ட திருமறையின் வாசகம் என் கருத்தைக் கவர்வதாயிருந்தது. அது 'பிலிப்பியர் களுக்கான திருமுகம்' நான்காவது இயலாயிருந்தது (Philippians, Chapter) “கடைசியாக, தோழர்களே! எவை எவை மெய்யானவை, வாய்மையுடையவை, நேர்மை வாய்ந்தவை. தூயவை, வனப் புடையவை, எவை எவை நல்லவை என்று குறிப்பிடத்தக்கவை; என்று நீங்கள் கருதினாலும், அவற்றைப் பற்றி ஒரு சிறிது சிந்தியுங்கள்! பண்புடையன, போற்றத்தக்கன, என்று ஏதேனும் இருக்கக்கூடுமானால், அவற்றைப் பற்றி ஆழ்ந்து ஆராயுங்கள்!” என்பதே அந்தத். திருமறைவாசகத்தின் தொடர்களாயிருந்தன.
இத்தகைய சிறந்த மூலபாடம் இருக்கும்போதாவது, கட்டாயமாக ஒழுக்கத்தைப் பற்றிய நல்லுரை இடம் பெறும் என்றுதான் நான் கருதினேன். ஆனால், திருமறை முனைவரின்