(214
அப்பாத்துரையம் - 9
பற்றியது. நற்பண்புகள் இயல்பாகவே பழகிவிட்டாலல்லாமல், அவற்றுக்குத் தக்க பாதுகாப்பு ஏற்படாது என்பதை அது தெளிவாக்கிற்று. அத்துடன் அந்த நற்பண்புகளுக்கு மாறான எதிர்ப்பண்புகளும் அதேபோல ஒழிக்கப்பட வேண்டும் என்பதை அது வற்புறுத்திற்று. இவ்விரண்டும் 1735-ஆம் ஆண்டு தொடக்கத் துக்குரிய இந்நாளிதழ்களில் இடம் பெற்றன.
6. பத்திரிகைகளின் தகுதியற்ற வசைமாரிகள்
அணிமை நாட்களில் வசையும் நேரிமைத் தாக்குதலும் நம் நாட்டின் மிக மோசமான பெரும் பழிகளாயுள்ளன. என் பத்திரி கையளவில், நான் இவற்றை விழிப்புடன் விலக்கி வந்தேன். அம்மாதிரி எதையாவது வெளியிடும்படி நான் கோரப்பட்டதுண்டு. ‘பத்திரிகையின் சுதந்திரம்' என்ற முறையில் அவை பொதுவாக அவர்களால் வற்புறுத்தவும்பட்டன. பத்திரிகை என்பது பயணம் செய்வதற்குரிய ஒரு வண்டி என்றும், வண்டிச் சந்தம் கொடுத்த வர்களுக்கு எல்லாம் அதில் பயணம் செய்வதற்கு உரிமை உண்டு என்றும் வாதிடப்பட்டது.
அச்சமயத்தின் எல்லாம் என் மறுமொழி ஒன்றே ஒன்று தான்: "வேண்டுமென்றால், உங்கள் கட்டுரையைத் தனியாக அச்சிட்டு, எத்தனை படிகள் வேண்டுமோ, அத்தனை படிகள் தருகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம்போல, அதை மக்களுக்கு வழங்கலாம். ஆனால், நீங்கள் எழுதும் நிந்தை மொழியைப் பரப்பும் பணியை நான் செய்யமுடியாது. என் பங்குவரியாளரிடம் நான் தொடக்கத்தில் செய்துகொண்ட ஒப்பந்தம் அதுவன்று. அவர்களுக்குப் பயனுடையவற்றையும் இன்பகரமானவற்றையும் தருவதாகவே ஒப்புக்கொண்டேன். அவர்களுடன் தொடர்பற்ற தனிமனிதர் பூசல்கள் இரண்டு வகையிலும் சேர்ந்தவையாக மாட்டா. ஆகவே, அவற்றை வெளியிடுவது அப்பங்கு வரியாளர்க்கு நேர்மைக்கேடுசெய்வதாகும்" என்று நான் விடையிறுத்து வந்தேன்.
நம்மிடையே மிக நேர்மை வாய்ந்த மனிதர்களைக்கூடத் தனிமனிதர் பகைமை விட்டதில்லை. நம் நாட்டு அச்சகத்தாரில் பலர் அப்பகைமையின் வேண்டுகோளுக்குத் தம் பத்திரிகையில் இடம் தந்து ஆதரிக்கவும் தயங்குவதில்லை. சில சமயங்களில் பத்திரிகைகள் வளர்த்த பகைமைப் பூசல் நேரடிச் சண்டைவரை