பெஞ்சமின் பிராங்ளின்
253
செய்ய முன்வந்தார். அவர் என் அடுப்பில் ஒரு சில மாறுதல் களைச் செய்து கொண்டு, என் சிறு நூலின் பெரும்பகுதியை உள்ளடக்கி, ஒரு நூலை வெளியிட்டார். அடுப்பில் அவர் செய்த மாறுதல்கள் அதை மேம்படுத்தவில்லை. அதன் பயனைக் குறைத்து, அதன் வேலை முறையையும் ஓரளவு தடை செய்தன. ஆனால், அவர் அந்த அடுப்பிற்குக் காப்புரிமை பெற்றார். அதன்மூலம் அவருக்கு ஓரளவு பெருஞ் செல்வமும் கிடைத்தது.
நான் கண்டுபிடித்த புதுமைகளுக்குப் பிறர் காப்புரிமை பெற்ற நிகழ்ச்சி இது ஒன்று மட்டும் அன்று. இன்னும் பலப் பலர் அதில் வெற்றியும் கண்டனர். ஆனால், நான் அவர்களை ஒரு போதும் எதிர்த்து வாதாட எண்ணவில்லை. ஏனெனில், எனக்கு ஒருபுறம் அவற்றின் மூலம் ஆதாயம் பெறும் எண்ணம் இருந்த தில்லை; மறுபுறம் எத்தகைய வாத வழக்குகளையும் நான் விரும்ப வில்லை.
என் மாகாணத்திலும், அயல் மாகாணங்களிலும் இந்தப் புதுவகை அடுப்புக்களின் மூலம் மக்களுக்கு விறகின் செலவு எவ்வளவோ குறைய வழி ஏற்பட்டுள்ளது.
42. புதிய திசைச் சீர்திருத்த ஆர்வம் : கல்வி
போர் முடிந்து அமைதி ஏற்பட்டது.போர்க் காலப்படைத் திரட்டு வேலைக்கும் ஒரு முடிவு உண்டாயிற்று. ஆகவே, நான் ஒரு கல்லூரி நிறுவுவதற்கான வழியில் என் எண்ணத்தைத் திருப்பினேன். இவ்வகையில் நான் எடுத்துக் கொண்ட செயல் திட்டத்தின் முதல்படி என்னுடன் ஒத்துழைக்கத் தக்க செயலூக்க முள்ள நண்பர்களிடம் அதை விளக்குவதே ஆகும். இந்நண்பர் களிடையே ஜண்டோக் கழகத்தின் உறுப்பினர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். எனது அடுத்த முயற்சி இது பற்றிய ஒரு சிறு நூல் எழுதி வெளியீடுவதே அது. "பென்சில் வேனியாவிலுள்ள இளைஞரின் கல்விநிதி பற்றிய புத்துரைகள்,” என்ற தலைப்பைத் தாங்கிற்று. இதை நான் இலவசமாக நாட்டு மக்களிடையே வழங்கினேன்.