(260
சென்று இந்தியரைச் சந்தித்தோம்.
அப்பாத்துரையம் - 9
சிவப்பிந்திய மக்கள் மிகுதி குடிப்பழக்கம் உடையவர்கள். குடிவெறியில் அவர்கள் சச்சரவிடுவதும்.குழப்பம் விளைவிப்பதும், விலக்கக்கூடாத செயல்கள். ஆகவே, அவர்களிடையே குடி வகைகளை யாரும் விற்கக்கூடாது என்று நாங்கள் தடையுத்தரவு செய்தோம். இத்தடை பற்றி அவர்கள் பெருத்த முறையீடு செய்யத் தொடங்கினர். ஒப்பந்த காலத்தில் வெறியில்லாமல் தொடர்ந்து அமைதியுடனிருந்தால், அந்த வேலை முடிந்தவுடன் ஏராளமாகக் கடுந்தேறல் (Rum) வழங்கப்படும் என்று நாங்கள் உறுதி கூறினோம். வேறு எவ்வழியிலும் குடிவகை அகப்படாது என்று கண்டு, அவர்கள் அவ்வாறே இணங்கினர். அதன்படி அவர்கள் நடந்து கொண்டதனால், இரு திறத்தாருக்கும் மன நிறைவு அளிக்கும் முறையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன் முடிவில் அவர்கள் தங்கள் குடியுரிமை கோரி இணக்கம் பெற்றனர்.
51. கண் கண்ட நரகம்
அவர்களிடையே ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளுமாக நூறு பேர் இருந்தனர். அவர்களுக்காக் குடில்கள் சதுரக் கட்டமாக நகர்ப்புறத்தில் கட்டப்பட்டிருந்தன. குடியுரிமை பெற்ற சமயம் பிற்பகல், மாலை ஆவதற்குள் கூடாரம் இருந்த இடம் எங்கும் அனல் மயமாகவும் ‘கூகூ' என்ற ஆரவாரம் நிறைந்த தாகவும், காணப்பட்டது.ஆணையாளர்களாகிய நாங்கள் செய்தி
ன்ன தென்று அறிய அப்பக்கம் சென்றோம். கூடாரத்தின் நடுக் காட்டில் அவர்கள் பாரிய தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு ஆடியிருந்தனர். ஆணும் பெண்ணும் குடிவெறியில் ஆடியும் பாடியும் அடித்தும் பூசலிட்டும் கலகம் விளைவித்தனர். அரை குறை ஆடை உடுத்திய கரு நிற உருவங்கள் கையில் தீப்பந்தங் களைத் தாங்கி, ஒன்றை ஒன்று தாக்கத் தொடங்கின.தீப்பந்தத்தின் அடியைத் தாங்கிக் கொண்டு, கூக்குரலிட்ட வண்ணமே, அடிப்பட்டவர் மற்றவர் ளைக் தீப்பந்தங் கொண்டு தாக்கினர். 'நரகம்' என்ற ஒன்று இருக்கக் கூடுமானால், அதன் காட்சி இவ்வாறுதான் இருக்கும் என்று எண்ணினேன். அவர்களை அமைதி கொள்ளச் செய்ய முடியாது என்று கண்டு நாங்கள் மீண்டோம்.