பெஞ்சமின் பிராங்ளின்
261
நள்ளிரவில் எங்கள் கதவுகள் தடதடவென்று தட்டப்பட்டன. “புட்டிகள் போதா; இன்னும் வேண்டும்" என்ற கூச்சல் எழுந்தது. ஆனால், நாங்கள் வாய் பேசாது செவிடர்போல, இருந்து விட்டோம்.
52. 'கள்ளும் கடவுள் படைப்பே! வெறியூட்டவே படைத்தார்!'
ஆனால், மறுநாள் பொழுது விடிவதற்குள் அவர்களது இயற்கையறிவு திரும்பிவிட்டது. தாம் செய்த அமளிகளுக்கு அவர்கள் தாமே வெட்கினர். அவர்கள் முதியவர்களுள் மூவரை அனுப்பி, தாங்கள் செய்துவிட்ட கலவரத்துக்கு வருந்துவதாகவும், மன்னிப்புக் கோருவதாகவும், தெரிவித்தனர். அவர்கள் சொற் பொழிவாளன் குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், பொறுப்பைக் கடுந்தேறலின் மீதே சுமத்தி அரியதொரு சொல்மாரி பெய்தான். “எல்லாம் படைத்த பேருயிர் சிலவற்றை நல்ல பயனுடைய வையாகப்படைத்தது.படைத்த பயனை எண்ணியே நாம் அவற்றை வழங்குவது கடமையாகும். ஆனால், கடுந்தேறலைப் படைத்த போது அப்பேருயிர்.“இது இந்தியருக்கு வெறியூட்டட்டும்” என்று கருதியே படைத்தது. அதன் படைப்பின் ஆற்றலை யாரால் கடக்க முடியும்?” என்பதே அதன் சுவைமிக்க கலைப்பேருரையாய் இருந்தது.
சொற்பொழிவாளரின் வாதம் என உள்ளத்தில் மற்றொரு வாதத்தை உண்டாக்கியிருந்தது. நிலத்தைப் பண்படுத்த வல்ல மக்களை இந்த மாநிலத்தில் குடியேற்றுவதற்காக, இக்காட்டு மனித இனத்தைப் பேருயிர் அறவே துடைத்தொழிக்க எண்ணி யிருக்கக் கூடுமானால், அதற்காகவே இந்தக் கடுந்தேறலைப் படைத்திருக்க வேண்டும் என்று கூறலாம். ஏனெனில், முன்னால் கடல் தீரத்தில் வாழ்ந்த அவர்களின் இனத்தினர் அனைவரும் ஏற்கெனவே அந்தத் திருப்படைப்புக்கு இரையாய் அழிந்துபட்டு விட்டனர்!
53. தாமஸ் பாண்ட் : மருத்துவமனை முயற்சி: பிராங்க்லின் ஒத்துழைப்பு
1751-இல் என் தனிப்பட்ட நண்பருள் ஒருவரான டாக்டர் தாமஸ் பாண்ட் (Dr. Thomas Bond) பிலடெல்பியாவில் ஏழை நோயாளிகள் தங்கி உதவி பெறுவதற்காக ஒரு மருந்தகம் நிறுவ