பக்கம்:அப்பாத்துரையம் 9.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெஞ்சமின் பிராங்ளின்

269

நாலு தகடுகளில் ஒன்றே உடைந்ததனால், விளக்கு உடனே பயனற்றதாகி விடவில்லை உடைந்த தகட்டை மட்டும் மாற்றி, எளிதில் பழுது பார்க்கக்கூடியதாகவும் அது அமைந்தது.

லண்டனிலேயே வாக்ஸ்ஹாலில் (Vauxthall) உள்ள உருண்டை விளக்குகளின் அடியில் துளைகள் இருப்பதனால் ஏற்படும் நலனைக்கண்டு லண்டன் நகரத்தார் ஏன் அதன் படிப்பினை அறிந்து பின்பற்றவில்லை என்று நான்அடிக்கடி வியப்படைவது உண்டு. ஆனால், இதை அவர்கள் கவனிக் காததற்கும் ஒரு காரணம் உண்டு. இந்தத் துளைகள் இடப் பட்டதற்கான நோக்கம் உண்மையில் வேறொன்று என்னலாம். துளைகள் வழியாகத் தொடங்கும் ஓர் இழைமூலம் அதன் திரியில் எளிதில் சுடர் ஏற்ற முடிந்தது. துளையின் இரண்டாவது பயன் காற்றை உள்ளே விடுவது. இதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. ஆகவே, லண்டன் தெருக்களில் விளக்கு வைத்த சில மணி நேரம் ஒளி தந்த பின், இருள் சூழ்ந்து விடுகின்றது!

60. லண்டனில் இருக்கும்போது பரிந்துரைத்த தெருப்பெருக்குத் திட்டம்

இச் சீர்த்திருத்தங்களைப் பற்றி நான் குறிப்பிடும் போது, லண்டனின் இருக்கும் சமயம் நான் டாக்டர் பாதர்கிலிடம் (Dr. Fothergil) கூறிய மற்றொரு திருத்தக் கருத்துரை என் நினைவுக்கு வருகிறது. எனக்கு அறிமுகமான அன்பிற் சிறந்த திருமக்களுள் அவர் ஒருவர், பயன் தரத்தக்க பல நல்ல திட்டங்களை அளித்தவர் அவர்.

தெருக்கள் கோடைக்காலத்தில் பெருக்கப்படாமலே இருப்பதை நான் கவனித்ததுண்டு. அச்சமயம் உலர்ந்த புழுதிக் காற்றில் பறந்து சென்றது. பல இடங்களில் அது சென்று, செறிந்து கிடந்து மழை வந்தவுடன் சேறாயிற்று!" பல வாரங்கள் ஆனபின் சேறு ஆழமாகி, மக்கள் நட க்க முடியாதபடிபெருகிற்று. இப்போது அதை அகற்றுவதற்குக் கடுமுயற்சி தேவையாயிற்று. மேற்புறம் திறந்தபடியிருந்த மொட்டை வண்டிகளில் அது தோண்டி எடுத்துப் போட்டு அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால்,