பக்கம்:அப்பாத்துரையம் 9.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

11.

அப்பாத்துரையம் - 9

சேற்றின் சிதறல்கள் வண்டியின் இருபுறத்திலும் நடை பாதைகளில் சிந்தி, நடந்து போகிறவர் வருகிறவர்களுக்குப் பெருந் தொல்லையும் தந்தன.

தூசியைத் தூசியாக அகற்றாமல், சேறானபின் அகற்று வதற்கு ஒரு காரணம் கூறப்பட்டது. தூசியைப் பெருக்கினால், அது வீடு கடைகளின், வாயில்களின் பலகணிகள் வழியாகப் பரவி, மனிதருக்கு இடையூறு விளைவிக்கும் என்று கருதப்பட்டது.

61. ஒரு வெள்ளிக்காக ஒரு தெரு முழுவதும் பெருக்கிய ஏழை

ஆனால், துப்புரவு வேலை எவ்வளவு சிறிது நேரத்திற்குள் முடிந்துவிடக்கூடும் என்பதை நான் தற்செயலாகவே காண நேர்ந்தது.கிரேவன் தெருவில் (Craven Street) ஒரு நாள் என் வீட்டு வாயில் முன்னேயே ஓர் ஏழை மாது புல்வாருகோல் கொண்டு, தெருப் பெருக்குவதைக் கண்டேன். அவள் வெளிறிய நிறத்துடன் தளர்ந்த உடலுடையவளாகவே காணப்பட்டாள். நீடித்த நோயிலிருந்து அணிமையில் எழுந்து வந்தவள் என்று கூறத்தக்கவளாகவே அவள் தோற்றினாள். “அம்மணி, உன்னை இங்கே பெருக்கும்படி ஏற்பாடு செய்தவர்கள் யார்?” என்று கேட்டேன். அவள் “ஐயனே! யாரும் என்னை ஏற்பாடு செய்ய வில்லை. பெரிய மனிதர் வீட்டு முன்றிலைப் பெருக்கி விட்டுக் கேட்டால், ஏதேனும் துட்டுக் கொடுப்பார்கள் என்று கருதித்தான் வேலை செய்கிறேன்,” என்றாள். “அப்படியானால், இந்தத் தெரு முழுதுமே பெருக்கிவிட்டு வா. உனக்கு ஒரு வெள்ளி தருகிறேன்.” என்றேன் நான். இதை நான் கூறும்போது காலை மணி 9 இருக்கும். வெள்ளியை வாங்க அவள் 12 மணிக்கே வந்துவிட்டாள்.

முதலில் நான் பார்த்தபோது, அவள் மெல்லவே வேலை செய்து கொண்டிருந்தாள். ஆகவே, அவ்வளவு விரைவில் உண்மையிலேயே முடித்துவிட்டாள், என்று நம்ப முடியாமல், நான் என் வேலையாளை அனுப்பிப் பார்த்துவரச் சொன்னேன். தெரு முழுதும் முற்றிலும் துப்புரவாகவே பெருக்கப்பட்டிருந்தது. அடுத்த மழை தூசியை அடித்துக்கொண்டு போய்விட்டதனால்,