பெஞ்சமின் பிராங்ளின்
271
தெரு மட்டும் அன்றி, வாய்க்காலும், துப்புரவாகவே இருந்தது.
நலிவுற்ற ஒரு மாது ஒரு தெருவை மூன்று மணி நேரத்துக்குள் பெருக்க முடியுமானால், உரமிக்க, சுறுசுறுப்பு வாய்ந்த, மனிதன் அதை இதில் பாதியளவு நேரத்தில் பெருக்கிவிட முடியும் என்று கணித்தேன். அத்துடன் இன்னொன்றும் என் கருத்தில் பட்டது. ஒடுங்கிய தெருக்களில் நடைபாதைகளின் அருகே இரு புறமும் இரண்டு வாய்க்கால்கள் ஓடுவதைவிட, நடுவில் ஒரு வாய்க்கால் இருக்கும் இடத்தில், தெருவின் நீர் முழுதும் இருபுறமிருந்தும் அந்த ஒரே வாய்க்காலில் வந்து விழும். நீர் மிகுதியாதலால், வேகமும் மிகுதியாகி, சேறாகாமலே தூசி முழுதும் அகற்றப் பட்டு விடும். ஓரமாகச் செல்லும் வாய்க்கால்களில் நீர் இரு பங்காகப் பிரிந்து, வேகம் குன்றி விடுவதால், சேறு தங்குதல் எளிது.வண்டிச் சக்கரங்களும்,குதிரைக் குளம்புகளும்2 சேற்றை நடைபாதைகளின் மீது சிதறடித்து, நடப்பவர்களுக்கு இடையூறு விளைவிக்கின்றன. அருவருப்பான தோற்றமும் வழுக்கலும் ஏற்படுகின்றன. சில சமயம் நடப்பவரின் ஆடை மீதும் சேறு தெறிக்கின்றது.
62. நகரத் துப்புரவு பற்றி ஆசிரியரின் அறிவுரை
மேற்குறிப்பிட்ட டாக்டரிடம் இவற்றை எல்லாம் விளக்கி, நான் என் கருத்துரையை வழங்கினேன்:
“லண்டனிலும் வெஸ்ட்மின்ஸ்டரிலும் உள்ள தெருக்களைத் துப்புரவாக வைத்துப் பேணவேண்டுமானால், அதற்காகப் பல தொழிலாளர் கால அட்டவணைப்படி அமர்த்தப்பட வேண்டும். கோடைக்காலத்தில் அவ்வப்போது அவர்கள் தூசி பெருக்கிவர வேண்டும். மற்றக் காலங்களில் சேற்றை வாரி ஒதுக்க வேண்டும். தெருவுக்குத் தெரு, குறித்த காலத்தில், வேலை செய்ய வேறுவேறு ஆட்கள் அமர்த்தப்பட வேண்டும். பெருக்குவதற் கான விளக்கமாறு முதலிய கருவிகள் அவர்களுக்கு வழங்கப் பட்டு, அவற்ற வற்றுக்குரிய தொழிலிடங்களுக்கு அருகில் வைத்துப் பேணப் பெற வேண்டும். ஊழியம் செய்யும் ஏழை மக்களே அவற்றை வாங்கும்படி விட்டுவிடப்படாது.
"கொஞ்சத் தொலைக்கு ஓரிடமாக, ஒரு குறிப்பிட்ட இடத்தில், கோடைக்காலத்தில் தூசிகள் ஒதுக்கப்பட வேண்டும். வீடு கடைகளின் வாயில் பலகணிகள் திறக்கப்படுவதற்கு