பக்கம்:அப்பாத்துரையம் 9.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(274)

|

அப்பாத்துரையம் - 9

பல தொல்லைகளிலிருந்து நிலையான விடுதலை பெறுகிறான். மேலும், அவன் தான் விரும்பும் நேரத்தில் மழிக்கும் வாய்ப்பையும், நல்ல கருவியையே என்றும் கையாளும் உறுதியையும், அடைகிறான்.

நான் நேசிக்கும் நகருக்கு என்றேனும் பயன்படக்கூடும் என்ற எண்ணத்திலேயே இச்சில பக்கங்கள் எழுதப்பட்டன. ஆனால், அவை அமெரிக்க நாட்டின் பிற நகரங்கள் பலவற்றுக்கும் கூடப் பொருத்தமாய் அமையக்கூடும்.

65. அஞ்சல் நிலைய இணைமுதல்வர் பணி

சில காலமாக நான் அமெரிக்காவின் அஞ்சல் முதல்வருடன் அஞ்சல் துறை மேற்பார்வையாளராகச் செயலாற்றி வந்தேன். 1753-இல் பழைய அஞ்சல் முதல்வர் காலமான, திரு.வில்லியம் ஹண்டர் (Mr.William Hunter) என்பவருடன் கூட்டாக நான் அந்த அலுவலில் அமர்வு பெற்றேன். அதற்காக இங்கிலாந்தின் அஞ்சல் முதல்வரிடமிருந்து ஆணைப் பத்திரமும் வந்து சேர்ந்தது.

இதுவரை அமெரிக்க அஞ்சல் நிலையம் பிரிட்டனுக்கு எந்த வகையிலும் ஊதியம் உடையதாய் இருந்ததில்லை. பணி யாளரான எங்கள் இருவருக்கும் சேர்த்து 600 பொன் ஊதிய மாகத் தரப்பட்டது. அதை நிலைய ஆதாயத்திலிருந்தே நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் ஆதாயம் தருவிக்கப் பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது. முதல் நான்கு ஆண்டுகளில் நிலையம் தான் எங்களுக்கு 900 பொன்னுக்கு மேல் கடன்பட்டிருந்தது ஆயினும், விரைவில் அது ஆதாயம் தரத் தொடங்கிற்று.

அமைச்சர்களின் நடைமுறைக் கோளாற்றின் பயனாக நான் மாற்றப்பட்ட செய்தி பற்றிய விவரத்தை நான் இனிக் கூற இருக்கிறேன். அங்ஙனம் நான் மாற்றப்படுமுன், அயர்லாந்து அஞ்சல் நிலையத்தின் ஆதாயத்தைப் போல ஆங்கில அரசுக்கு மும்மடங்கு ஆதாயம் தருவதாக நான் அதை மாற்றியிருந்தேன். திருந்திய அழிவற்ற மேற்கூறிய செயலின்பின், அவர்கள்இந்த ஆதாயத்தில் ஒரு செப்புக்காக (Farthing) கூட அடைய முடிய வில்லை!