பக்கம்:அப்பாத்துரையம் 9.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெஞ்சமின் பிராங்ளின்

88. போர்ச் சூழ்நிலைபற்றிய ஆசிரியர் அறிவுரை : தலைவர் தன்னிறை இறுமாப்பு

295

அவர் கூறிய பாதையின் நிலைமைபற்றி நான் என் உள்ளத்தில் ஏற்கெனவே சிந்தித்துப் பார்த்துக்கொண்டேன். அது ஒருநெடுநீளமான, ஆனால் இடுக்கமான வழி. அதன் மீது இரு புறமும் காடு புதர்களை வெட்டிப் பாதையைச் செப்பனிட்டுக் கொண்டுதான் செல்லவேண்டும். இதே பாதை யூடாக முன்னர் இராக்வாயக் (Iroquois) பகுதியின்மீது தாக்கச் சென்ற 15,000 பிரஞ்சுப் படைவீரரின் தோல்விபற்றி நான் வாசித்திருந்தேன். ஆயினும் அவரிடம் நான் இதை எல்லாம் கூறவில்லை. “உங்கள் படை மிக நேர்த்தியானது. பீரங்கித் தளவாடங்களும் அருமை யானவை.டுக்குவீனோ இன்னும் முழுவதும் அரண் செய்யப்பட வில்லை. காவற்படைகளம் மிகுதி இல்லை என்றே கேள்வி. இந்த நிலையில் உங்கள் படைகளின் முன் அது நெடுநாள் தாக்குப் பிடிக்க முடியாது என்பதில் ஐயமில்லை. ஆனால், வேறொரு துறையில் மட்டுமே இடர் மிகுதியாயிருக்கும் என்று கருதுகிறேன். வழியில் புதரிடையில் பதுங்கியிருந்து இந்தியர் தாக்கக்கூடும். அவ்வகைத் தாக்குதலில் நீண்ட காலப் பயிற்சியால் அவர்கள் அருந்திறம் உடையவர்கள். இடுங்கிய பாதையில் உங்கள் படை அகலங்குறைவுற்று, கிட்டதட்ட நான்கு கல் நீளம் பரந்து செல்ல வேண்டி வருமாதலால், இருபக்கங்களிலிருந்தும் எல்லா இடங் களிலும் இத்தாக்குதல்களைச் சமாளிக்க வேண்டிவரும். நீண்ட வரிசை இதனால் துண்டுபட்ட இழைகள் போலச் சிதறிக் கிடக்கு மாதலால், எதிரியைத் தாக்க விரைவில் ஒன்றுபட முடியாது.

படைத் துறையைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்களைக் கண்டு புன்னகை பூப்பதுபோல அவர் புன்முறுவல் பூத்தார். "படைப்பயிற்சி யற்ற உங்கள் அமெரிக்க நாட்டு வீரர்களுக்கு இந்தக் காட்டு வீரர்கள் வலிமைவாய்ந்த பகைவர்களாகத் தோன்றக்கூடும். ஆனால், மன்னர் பிரானின் பயிற்சிபெற்ற படையணியின் மீது அவர்கள் சாயம் செல்லாது”, என்று அவர் கூறினார்.படைத்துறை வல்லுநர் ஒருவருடன் இம்மாதிரி செய்தி களைப் பற்றிப் பேசும் தகுதி எனக்கு இல்லை என்று எண்ணி நான் பேச்சை இத்துடன் நிறுத்தினேன்.