பெஞ்சமின் பிராங்ளின்
21
புதிய நாடான அதை அரசியல் துறையில் ஒடுக்கிவிடுவது என்ற ஆணவப் போக்கையும், பிரிட்டன் கைவிட்டுச் சமரசம் பேச முன்வந்தது!
1783-இல் பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, அமெரிக்காவுடன் பிரிட்டன் நேச உடன்படிக்கை செய்து கொண்டது. அமெரிக்காவின் சார்பில் அதில் இடப்பட்ட முக்கியமான கையொப்பம் பிராங்க்லினுடையதே.
11. மாலை பொன்னொளி
ஐரோப்பிய அரசியலரங்கத்தில் அமெரிக்காவுக்கு வெற்றி தேடித் தந்தபின், அவர் தாய்நாடு செல்ல விரும்பினார். தூதர் பணியிலிருந்து தமக்கு விடுதலை தரும்படி அவர் தாயக அரசியலை வேண்டினார். இவ்விடுதலை 1785-லேயே அவருக்குத் தரப்பட்டது.
இதன் பின்னரும் 3 ஆண்டுகள் அவர் பென்சில்வேனியாவின் செயலாட்சி மன்றத்தின் தலைவராயிருந்து புதிய அரசியலடிப் படைக்கு உறுதி தேடினார். பின் கூட்டாட்சி அரசியலமைப்பு மன்றத்திலும் உறுப்பினராகச் சென்று அமெரிக்க அரசியல மைப்புச் சட்டத்தில் தம் கையொப்பமிட்டார்.
ஐரோப்பாவிலிருந்து கடைசியாகத் தாய்நாட்டுக்கு வரும் போதுகூட, கப்பலிலிருந்துகொண்டு அவர் கப்பல்கட்டும் புதுமுறைகள், கடலோட்டத்தின் அடிப்படைக் காரணங்கள், வானிலை ஆராய்ச்சிச் செய்திகள், ஆகியவை பற்றிய சிந்தனை களிலே ஆழ்ந்திருந்தார். அவர் நாட் குறிப்புக் கட்டுரைகளும் இவற்றை நமக்கு உணர்த்துகின்றன.
அவர் வாழ்வின் கடைசி முயற்சி குறிப்பிடத்தக்க ஒன்று. அமெரிக்காவில் அடிமைத்தளையை ஒழிக்க அவர் காலத்துக்குப் பின்னால் ஒருபெரும் போரே நடத்த வேண்டியிருந்தது. அதைச் செய்துமுடிக்கஓர் ஆபிரகாம்லிங்கன் தேவைப்பட்டார்.ஆபிரகாம் லிங்கனின் பணியின் கருநிலைக் கனவார்வத்தைப் பிராங்க்லினின் இக்கடைசிச் செயலில் காண்கிறோம். அடிமைத்தளை ஒழிக்க வேண்டும் என்ற திட்டம் வகுத்து, அதற்கு ஆதரவான ஒரு பாரிய மனுவில் அவர் பலர் கையொப்பம் வாங்கினார். தம் கையொப்ப மிட்டு,அதைக் கூட்டாண்மைப் பேரவைக்கு அனுப்பினார்.