பெஞ்சமின் பிராங்ளின்
27
பெற்றது. ஆயினும், மூன்றாம் பகுதியின் இறுதியில் பிற்சேர்க்கை போலச் சேர்க்கப்பட்ட நான்காம் பகுதி அதில் இல்லாதிருந்தது.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி. தன் வரலாற்றின் வரலாற்றை ஒரு சிறிய துப்பறியும் புனை கதையாக்கிற்று. வில்லியம் டெம்பிள் பிராங்க்லின் பதிப்பு மூலப் படியின் சரிபதிப்பாக எங்கும் ஏற்கப்பட்டாலும், பிராங்க்லின் கையொப்பமிட்ட மூலப்படி எங்கும் கிடைக்காதது பற்றி ஒரு சிலர் தயக்கம் கொண்டிருந்தனர். அந்தச்சிலரில் பிராங்க்லினைப் போல பிரான்சில் அமெரிக்காவின் தூதராயிருந்த மேதகு திரு பிஜ்லோ (Hon'ble Mr. Bigelow) ஒருவர். பிராங்க்லினின் வாழ்வு கடந்து இரண்டு தலைமுறைகளான பின்பும் அதைத் தேடிப் பிடிக்கமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அத்துறையில் அவர் அயராது முயன்று வந்தார். 1866-இல் அவர் தேடிய மூலப்படி தற்செயலாக அவர் கைப்பட்டது. அதைக் கைப்பற்று முன், அதை வைத்திருப்பவருக்கு அவர் 20,000 பிரஞ்சு வெள்ளி (10,000 அமெரிக்க வெள்ளி அல்லது 25,000 இந்திய வெள்ளி) கொடுக்க வேண்டிருந்தது.
மூலப்படியைப் பெற்று ஆராய்ந்த போது, 20,000 வெள்ளி கொடுத்துப் பெற்று விட்டதற்காக அவர் சிறிதும் வருந்தவில்லை. நேர்மாறாக, மட்டற்ற மகிழ்ச்சி பெற்றார். ஏனென்றால், அதன் அடித்தல்களும், திருத்தல்களும், ஓரக்குறிப்புகளும் அது பிராங்க்லினுடைய மூலக் கைப்படியே என்பதை நிலைநாட்டின. அதனுடன் அந்த மூலப்படியை வைத்திருந்த திரு. டி. சேனார்மோ (M de Senarmont) பிராங்க்லின் நண்பரான திரு. லெ.வேயார்ட் (M le Villard) என்பவரின் மரபினர் என்பதும் அதனுடன் இருந்த கடிதங்களாலும் நிழற் படத்தாலும் தெரியவந்தது. கடிதங்கள் பிராங்க்லின் கையெழுத்திலே திரு. வேயார்டுக்கே எழுதப் பட்டிருந்தன. படம் கண்ணாடியிடப் பட்டிருந்தது. அதன் கீழ் பிரஞ்சு மொழியில் "பெஞ்சமின் பிராங்க்லினின் ஓவியம்: வயது 77; அன்பர் திரு. வேயார்டுக்காக 1783-ல் ஜே. எஸ். டியுப்ளேஸியால் வரையப்பட்டது,” என்ற விளக்கம் இருந்தது.
ந்த மூலப்படியில்தான் முதன்முதலாக மூன்றாம் பகுதியின் பிற்சேர்க்கை அல்லது நான்காம் பகுதி காணப்பட்டது.