பக்கம்:அப்பாத்துரையம் 9.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெஞ்சமின் பிராங்ளின்

37

அவர் தாமாகத் தமக்கென ஒரு சுருக்கெழுத்து முறையை (Shorthand) வகுத்திருந்தார். என் தந்தையுடன் அவர் மிகவும் பாசமுடைய வராயிருந்ததனால், அவரது பெயரே எனக்கு இடப் பட்டிருந்தது.அவர் மிகவும் கடவுட்பற்றுடையவர். நல்ல கோவிற் சொற்பொழிவாளரின் சொற்பொழிவுகளையெல்லாம் அவர் தவறாது சென்று கேட்பார். தம் சுருக்கெழுத்தில் அவற்றைக் குறித்துக் கொள்வார். இங்ஙனம் குறித்த சொற்பொழிவின் பல ஏடுகள் அவரிடம் இருந்தன.

அவர் பெரிய அரசியல்வாதியும் கூட, அவர் வாழ்ந்த நிலைக்கு அவர் கொண்டிருந்த அரசியல் ஈடுபாடு சற்று மிகுதி என்றே கூறவேண்டும். 1641 முதல் 1717 வரையில் முக்கியமான பொது வாழ்வின் செய்திகளைப் பற்றிய துண்டு வெளியீடுகள் பலவற்றை அவர் தொகுத்து வைத்திருந்தார். அண்மையில் இதன் ஒரு பெருந்தொகுதி என் கைப்பட்டது. வரிசை எண்களை நோக்க, டையிடையே பல ஏடுகளைக் காணவில்லை. அப்படியும் தொகுதியில் அரை மடியாக (Folio) எட்டு ஏடுகளும், கால்மடியாகவும் அரைக்கால் மடியாகவும் (Oetavo) இருபத்து நாலு ஏடுகளும், இருக்கின்றன. அவற்றைக் கண்டெடுத்து என்னிடம் கொண்டு வந்தவர் ஒரு பழைய சுவடி விற்பனையாளர். நான் அவரிடம் சில சமயம் சுவடிகள் வாங்குவதுண்டு. அந்தப் பழக்கத்தை ஒட்டியே அவர் என்னிடம் அவற்றைக் காட்ட நேர்ந்தது. பெரும்பாலும் அமெரிக்காவுக்கு வருகிற பரபரப்பில் தான் இச்சிற்றப்பனார் இந்த ஏடுகளை விட்டு வந்திருக்க வேண்டும். எனவே, அவை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்டவை யாயிருக்க வேண்டும். பல ஏடுகளின் விளிம்போரங்களில் அவர் கைப்பட எழுதிய சில அருகுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

4. ‘திருநூலை’ ஒளித்து வாசித்தனர்!

ஒதுங்கி வாழ்ந்து வந்த நம் குடும்பத்தினர் சீர்திருத்த இயக்கக் (Reformotion) காலத்திலிருந்து புரொட்டஸ்டண்டு3 களாகவே நாட் கழித்து வந்தனர். அரசி மேரியின்4 ஆட்சியின் போதும் அவர்கள் தொடர்ந்து புரொட்டஸ்டண்டுகளாகவே இருந்தனர். பழைய திருத்தத்தைச் சமயத்துக்கு எதிரான உணர்ச்சி யார்வம் அவர்களிடையே மிகுதி. இந்நிலை மிகவும் இடர் தருவதாக இருந்தது. சீர்திருத்த சமயஞ் சார்ந்த அவர்கள் ஓர்