பக்கம்:அப்பாத்துரையம் 9.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெஞ்சமின் பிராங்ளின்

39

நியூ-இங்கிலாந்தில் முதல் மனைவியிடமே என் தந்தைக்கு மேலும் நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அதன்பின் இரண்டாம் மனைவி மூலம் அவருக்கு மற்றும் பத்துப் பிள்ளைகள் உண்டாயினர். ஆக மொத்தம் அவருக்குப் பதினேழு குழந்தைகள் தோன்றினர். ஒரு தடவை ஒரு சமயத்தில் இவர்களுள் பதின்மூவரான நாங்கள் ஒரே மேசையில் அவரோடு உட்கார்ந்து உணவு உட்கொண்ட காட்சி என் நினைவுக்கு வருகிறது. இந்தப் பதின்மூவருமே பின்னாட்களில் வளர்ந்து மனைவியருடன் வாழ்ந்தவர்கள் என்பதும் நினைவுக்கு வருகிறது. பிள்ளைகளில் இருவர் தவிர மற்றவர்களுக்கெல்லாம் நான் ளையவன். ஆனால், ஆண் மக்களில் நானே கடைசியானவன்.

தந்தையின் இரண்டாம் மனைவியாகிய என் தாயின் கன்னிப் பெயர் அபையா போல்ஜர் (Abiah Folger) என்பது. அவர் தந்தை பீட்டர் போல்ஜர் (Peter Folger) நியூ இங்கிலாந்தில் முதல் முதல் குடியேறியவருள் ஒருவர். “மக்ஞலியா கிரிஸ்டீ அமெரிக்கானா” என்ற பெயருடன் அந்நாட்டின் சமய வரலாறு எழுதிய காட்டன் மாத்தர் (Cotton Mather) அவரை மிகவும் நன்மதிப்புடன், 'தெய்வப்பற்றுடைய கல்வி கற்ற ஆங்கிலேயர்' என்று குறிப்பிட்டிருப்பதாக எனக்கு நினைவு. மேலும் அவர் (பீட்டர் போல்ஜர்) பல சமய சந்தர்ப்பமான தனிப் பாடல்கள் இயற்றியிருப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றுள் அச்சிட்ட ஒரே ஒருபாடலை நான் பல ஆண்டுகளுக்குப் பின் காண நேர்ந்தது. அது அக்கால நாட்டுப்புற மக்கள் நடையிலே,1765-இல் அந்நாளைய ஆட்சியாளரை நோக்கிக் கூறுவதாக அமைந்திருந்தது.

6

மனச்சான்றையும் கொள்கைத் தனியுரிமையையும் இப்பாடல் வற்புறுத்திற்று, சிறப்பாக, பாப்டிஸ்டுகள் வேக்கர்கள் முதலிய வகுப்பினரின் உரிமைகளை அது மனத்தில் கொண்டு அவர்கள்மீது கையாளப்பட்ட கொடுமைகளின் பழிகளாகவே, இந்தியப் போர்களும் பிற தீங்குகளும் நாட்டின் மீது கடவுளால் ஏவப்பட்டன என்று அரசியலாருக்கு அறிவுறுத்திற்று. அக்கொடிய சட்டங்களை உடனடியாக அகற்றி விடவேண்டுமென்றும் அது அரசியலாரை வேண்டிற்று, பாடல் முழுவதும் திறந்த உள்ளத்துடனும் ஒளிவு மறைவில்லாத