பெஞ்சமின் பிராங்ளின்
49
ஒப்பந்தப்படி நான் என் 21-வது வயது வரை பயிற்சி யாளனாகவே (Apprentice) வேலை பார்க்க வேண்டும். கடைசி யாண்டில் மட்டுமே தொழில்துணைவனாகச் (Journeyman) சிறிதளவு கூலி பெறலாம்.
மிகச் சில நாட்களுக்குள் நான் தொழிலில் பெருந்திறமை யுடையவனானேன். என் தமையனுக்கு நான் மிகவும் பயனுடைய தொழிலாளியாக உதவினேன். இப்போது முன்னிலும் நல்ல புத்தகங்கள் என் பார்வைக்கு வந்தன. புத்தக விற்பனைக்காரர்களின் பயிற்சித்தொழிலாளர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்ட தனால், நான் அவ்வப்போது ஒவ்வொரு புத்தகமாக இரவல் பெற முடிந்தது. அவற்றை நான் அழுக்காக்காமல் விரைவிலேயே கவனமாகத் திருப்பிக் கொடுத்து வந்தேன். பல சமயங்களில் புத்தகத்தை மாலையில் பெற்றுக் காலையில் கொடுக்க வேண்டி யிருந்தது. ஏனென்றால் கடைக்காரரின் அறிவிப்பில்லாமலே புத்தகத்தை எடுத்துப் பயன்படுத்த வேண்டியதாயிருந்தது.ஆகவே, நான் இரவில் பெரும் பகுதியையும் வாசிப்பதில் ஈடுபடுத்தினேன்.
சில நாட்களில் கூரிய அனுபவ அறிவுடைய திரு.மாத்யூ ஆடம்ஸ் (Mr. Matthew Adams) என்பவரின் கவனம் என்மீது திரும்ப நேர்ந்தது. அவர் அடிக்கடி எங்கள் அச்சகத்துக்கு வருவார். அவரிடம் ஒரு நல்ல புத்தகத் தொகுதி இருந்தது. என் வாசிப்பார் வத்தைக் கண்டு மகிழ்ந்து, அவர் என்னைத் தன் புத்தகத் தொகுதியைப் பார்வையிடும்படி அழைத்தார். அத்துடன் அடிக்கடி நான் விரும்பிய புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய். வாசித்து விட்டுத் திரும்பக் கொடுக்கும்படியும் அவர் இணக்கமளித்தார்.
13. கவிதைகள்
எனக்கு இப்போது திடுமென்று கவிதையில் ஈடுபாடு ஏற்பட்டது. சில சில சிறு பாடல்களும் எழுதத் தொடங்கினேன். இதனால் பயன் ஏற்படலாம் என்று நினைத்த என் தமையனார் இதில் எனக்கு ஊக்கம் தந்து அவ்வப்போது நாட்டுப் பாடல்கள் (Ballads) இயற்றும்படி தூண்டினார். இவற்றுள் ஒன்று கலங்கரை விளக்கத்துயர் கதை (The Lighthouse Tragedy) என்ற பெயருடையது. அது மீகாமன் வொர்த்தி லேக்கும் (Captain